சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தில் என்னென்ன சிரமங்களை சந்தித்தார் ஜெ?- சசிகலா பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தில் ஜெயலலிதாவும் நானும் பல்வேறு சிரமங்களை சந்தித்தோம் என சசிகலா பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து தந்தி டிவிக்கு சசிகலா அளித்த பேட்டியில் கூறுகையில் எம்ஜிஆர் மறைந்த தகவல் கேட்டு நான்தான் ஜெயலலிதாவிடம் சொன்னேன். இதை அமைச்சர்களோ கட்சி நிர்வாகிகளோ ஜெயலலிதாவிடம் சொல்லவில்லை.

உடனே நாங்கள் ராமாவரம் தோட்டத்தில்தான் உடலை வைத்திருப்பார்கள் என கருதி அங்கு சென்றோம். ஆனால் அங்கு எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் நாங்கள் கடுமையாக போராடினோம்.

ஜெயலலிதா மரணம்.. 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது? ஐகோர்ட் கேள்வி ஜெயலலிதா மரணம்.. 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

அறையில்

அறையில்

பின்னர் ஒரு வழியாக சிலரின் உதவியுடன் உள்ளே சென்றோம். அங்கு ஒரு அறையில் அவரது உடல் இருக்கும் என நினைத்தோம். ஆனால் அங்கு வைக்கப்படவில்லை. மீண்டும் வெளியே உள்ள போர்டிகோவிற்கு வந்தோம். அப்போதுதான் ஒரு வெள்ளை நிற வண்டியில் எம்ஜிஆரின் தொப்பி இருப்பதை கண்டு நான் ஜெயலலிதாவிடம் சொன்னேன் (சொல்லும்போதே பேட்டியில் கண் கலங்கினார் சசிகலா).

வாகனம் கிளம்பியது

வாகனம் கிளம்பியது

அப்போது அந்த வாகனம் கிளம்பியது, நாங்கள் பின்னாடியே துரத்தி கொண்டு சென்றோம். அந்த வாகனம் ராஜாஜி அரங்கத்திற்கு சென்றது. நாங்களும் அங்கு சென்றோம். எங்களை அங்கு எம்ஜிஆர் உடலுக்கு அருகே அனுமதிக்காமல் நிறைய தடைகளை சிலர் செய்தனர்.

ஊசி

ஊசி

அதையும் மீறி ஒரு சில அதிகாரிகளால் நாங்கள் அருகே சென்றோம். அப்போது என்னை ஊசியால் சிலர் குத்தினர். மேலும் யாரென்றே தெரியாத சிலர் அங்கு வந்து என்னிடம் "இங்கு நிற்காதீர்கள், போய்விடுங்கள்" என மிரட்டினர். நானும் தினகரனும் ஜெயலலிதாவுக்கு எதுவும் ஆகக் கூடாது என்பதால் அவரை அரண் போல் காத்து நின்றோம்.

இறுதி ஊர்வலம்

இறுதி ஊர்வலம்

அப்போது இருந்த சென்னை காவல் துறை ஆணையர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவ்வப்போது வந்து எங்களை பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து ராணுவ கான்வாயில் இறுதி ஊர்வலத்திற்காக எம்ஜிஆரின் உடல் வைக்கப்பட்டது. அதில் அந்த ராணுவ அதிகாரிகளிடம் பேசி ஜெயலலிதாவை நிற்க வைத்தோம்.

தள்ளுமுள்ளு

தள்ளுமுள்ளு

நாங்கள் கீழே நின்று கொண்டோம். அப்போது சிலர் ஜெயலலிதாவின் காலை மிதித்தனர். இன்னும் சிலர் அவரை பெண் என்றும் பாராமல் அவர் மீது கை வைத்து தள்ளினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ஜெயலலிதா கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த ஒருவர் எங்களிடம் வந்து "இந்த அவமானங்கள் ஆரம்பம்தான்.

போயஸ் தோட்டத்திற்கு

போயஸ் தோட்டத்திற்கு

நீங்கள் தயவு செய்து வீட்டிற்கு சென்றுவிடுங்கள். வாகனங்களில் நிறைய ஆட்களை வரவழைத்துள்ளார்கள். அதனால் இங்கே நிற்க வேண்டாம் என தெரிவித்தார். இதையடுத்து நான்தான் ஜெயலலிதாவை அழைத்து கொண்டு போயஸ் தோட்டத்திற்கு வந்துவிட்டேன் என்றார் சசிகலா.

English summary
V.K. Sasikala explains how Jayalalitha was manhandled in MGR last rites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X