ஜெ., மருத்துவமனையில் அனுமதி.. பவர் சென்டரான சசிகலா..10 அறையில் குடும்பத்தினர்.. டிஜெ பரபர விளக்கம்
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அன்றைய தினம் சசிகலா தான் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பவர்சென்டராக இருந்தார். சசிகலாவின் குடும்பத்தினர் 10 அறையில் தங்கியிருந்தனர் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் தீவிர விசாரணை நடத்தி 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல் அமைச்சர் முக ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது.

ரகசியமாக்கப்பட்ட விஷயங்கள்
இந்த ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அறிக்கையில், ‛‛ 22.09.2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை. டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்தச் செல்ல தயார் என கூறியும் அது ஏன் நடக்கவில்லை. போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

சசிகலா உள்ளிட்டவர்கள் மீது விசாரணை
அதுமட்டுமின்றி ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா, டாக்டர். கேஎஸ் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

ஜெயக்குமார் விளக்கம்
இந்நிலையில் தான் ஜெயலலிதாவின் மரணம் குறித்தும், அவர் மருத்துவமனையில் இருந்தபோது நடந்த விஷயங்கள் பற்றியும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி சென்னையில் இன்று ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:

விஜயபாஸ்கர் விவகாரம்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அன்றைய தினம் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் சசிகலாவும், அவர் சார்ந்தவர்களும் தான் இருந்தனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார். அதில் மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை. இதில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பவர் சென்டராக சசிகலா
ஆனால் முழுக்க முழுக்க வல்லான் வகுத்தது மாதிரி வல்லானின் தந்திரமும், பவர் சென்டர் தான் முழுக்க முழுக்க காரணம். பவர் சென்டர் என்பது சசிகலா குடும்பமும் தான். இது அனைவருக்கும் தெரியும். சசிகலாவின் குடும்பத்தினர் 10 அறை எடுத்து தங்கினர். இதில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை. சசிகலாவின் சொந்தக்காரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் தான் அறைகளில் தங்கினர்.

சந்தேகிக்கும் வகையில்..
மருத்துவமனையில் சேர்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. பாராசிட்டமால் மாத்திரை மட்டுமே கொடுத்துள்ளனர். ஏன் டாக்டர் சிவக்குமார் 3 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இதெல்லாம் சந்தேகிக்கப்படும் வகையில் தான் உள்ளது. தற்போது விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கையை பார்ப்போம்
வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல விடாமல் பவர் சென்டரான சசிகலா தான் தடுத்துள்ளார். இவை அனைத்தையும் நான் கூறவில்லை. அறிக்கையை படித்ததால் தான் கூறுகிறேன். தற்போது விசாரணை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கை மீது அரசு எடுக்கும் நடவடிக்கையை பார்த்து இதுபற்றி மேற்கொண்டு பேசுகிறேன்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications