சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்டில் ஆளே இல்லை.. நள்ளிரவில் வந்த இளம்பெண்.. என்ன செய்தார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்டில் ஆளே இல்லாத நேரத்தில் இளம்பெண் ஒருவர் விதவிதமாக நடனமாடி எடுத்த 2 ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒரு வீடியோவில் "கல்யாண விருந்து நீ அடிச்சு நொறுக்கு": என்ற பாடலுக்கு குத்தாட்டம் போடும் அந்த பெண், மற்றொரு வீடியோவில் "ஆடையலங்காரம் அது யாருக்கழகு" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். 2 ரீல்ஸ் வீடியோக்களும் ஒரே பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்டிருப்பது தான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ரூ.5.62 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 4-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Sathankulam Bus Stand

சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்டு

சாத்தான்குளம் கே.டி. கோசல்ராம் பேருந்து நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த புதிய பஸ் ஸ்டாண்டில் 40-க்கும் மேற்பட்ட வணிக வளாகக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கடைகளும் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த பஸ் ஸ்டாண்டு எப்போதுமே படு பிஸியாகவே இருக்கும்.

எனினும் சமீப நாட்களாகவே, புதிய பஸ் ஸ்டாண்டின் கட்டிடம் தொடர்பாக சில புகார்கள் எழுந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த லேசான மழையின்போது, மேல் பகுதியில் அமைந்துள்ள 3 கடைகளின் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும், அந்த விரிசல் வழியாக மழைநீர் கடைக்குள் கசிந்ததாகவும் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

இளம்பெண் செய்த காரியம்

இப்படியாக பலரது கவனத்திலும் இருக்கும் இந்த சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்டில்தான் இப்போது ஒரு வித்தியாசமான விஷயம் நடந்துள்ளது. இளம்பெண் ஒருவர், 2 சினிமா பாடல்களுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார், அதுவும் நள்ளிரவில்..!!

பொதுவாக பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் இரவு 11 மணிக்கு மேல்தான் மூடப்படும். ஆனால், நேற்றிரவு சோஷியல் மீடியாவில் வெளியான 2 ரீல்ஸ் வீடியோக்களிலும், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட்டமும் பெரிதாக இல்லை.

அந்த நேரத்தில் இளம்பெண் ஒருவர் பஸ் ஸ்டாண்டுக்குள் நின்று பாடல்களுக்கு நடனமாடியபடி ரீல்ஸ் எடுத்துள்ளார். இதனால் இந்த வீடியோக்கள் நள்ளிரவு நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

2 ரீல்ஸ் வீடியோ

அதில் ஒரு ரீல்ஸில், "கல்யாண விருந்து நீ அடிச்சு நொறுக்கு" என்ற பாடலுக்கு அந்த பெண் குத்தாட்டம் போடுகிறார். இன்னொரு ரீல்ஸில் "ஆடையலங்காரம் அது யாருக்கழகு" என்ற பாடலுக்கு நடனமாடுகிறார். 2 பாடல்களுக்கும் தனித்தனியாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 2 வீடியோக்களுமே அதே சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்டில் எடுக்கப்பட்டுள்ளன என்பது அந்த ரீல்ஸ் வீடியோவில் தெரிகிறது.

இந்த இளம்பெண் யார் என்பது தெரியவில்லை. அதேபோல், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்டையே தேர்வு செய்து ஏன் ரீல்ஸ் எடுத்தார் என்பதும் தெரியவில்லை. ஆனால், நள்ளிரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் அவர் ஆடிய இந்த 2 ரீல்ஸ் வீடியோக்களும் இப்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+