ரயில் முன் தள்ளி சத்யபிரியாவை கொன்ற சதிஷ்.. குண்டர் சட்டம் பாய்ந்தது..சென்னை காவல் ஆணையர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்த சதிஷ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி பரிந்துரையின் பேரில் சதிஷை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் தோழிகளுடன் நின்றிருந்த மாணவி சத்யப்பிரியாவை, சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சத்யபிரியாவை கொலை செய்ததாக சதிஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் சிறையில் உள்ள சதிஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மாணவி சத்யபிரியா

மாணவி சத்யபிரியா

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தவர் சத்ய பிரியா,20. இவரது தந்தை ஆக்டிங் டிரைவாக பணியாற்றி வந்தவர். தாய், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். மாணவி சத்யா உயிரிழந்த சோகத்தால் மாரடைப்பு ஏற்பட்டு சைதாப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவியின் தந்தை மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரயில் முன் தள்ளி கொலை

ரயில் முன் தள்ளி கொலை

மாணவி சத்யா தி.நகரில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரிக்கு செல்வதற்காக கடந்த மாதம் 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது பெண் தோழிகளுடன் வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோதே சத்யாவின் கையைப் பிடித்து, தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்தார். இதில் ரயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 ஒருதலைக்காதல்

ஒருதலைக்காதல்

சத்யா தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் சதிஷ் அவரை ரயில் முன் தள்ளி கொலை செய்தார் என தெரியவந்தது. ரயில்வே காவல்துறையில் மூன்று தனிப்படைகளும் பரங்கிமலை காவல்துறையின் நான்கு தனிப்படைகளும் தேடி வந்த நிலையில் துரைப்பாக்கம் அருகே தலைமறைவாக இருந்த சதிஷ் கைது செய்யப்பட்டார். சதீஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒருதலைக் காதலால் மாணவி சத்யா, ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினார் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு.

 சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

சத்திய பிரியாவை, சதிஷ் ஒருதலையாக காதலித்து வந்தார். தொடர்ந்து மாணவியின் பின்னால் சுற்றி தொந்தரவு செய்து வந்தார். ஆனாலும் அவரது காதலை மாணவி சத்திய பிரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சதிஷ் சத்ய பிரியாவை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்தார். பலமுறை பேச முயற்சித்தும் சத்யா பேசாமல் தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்து பத்து நாட்கள் பின் தொடர்ந்து சென்று கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.

சதிஷ் வாக்குமூலம்

சதிஷ் வாக்குமூலம்

கொலை நடந்த நாளுக்கு முன்னதாக மூன்று நாட்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்வதற்கு பின் தொடர்ந்து திட்டம் தீட்டியதாகவும் சத்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டினாலும் காதலித்த பெண் என்ற காரணத்தினால் கொலை செய்ய மனம் வராமல் தினமும் திரும்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார். கொலை செய்த தினத்தன்று தன்னையும் அறியாமல் குழப்ப மனநிலையில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும், உண்மையில் கொலை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என சி பி சி ஐ டி போலீசாரிடம் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீசார் சதீஷை நவம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பெற்று புழல் சிறையில் அடைத்தனர்.

 குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

இதனிடையே சத்யபிரியாவை கொலை செய்த சதிஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சிபிசிஐடி பரிந்துரையின் பேரில் சதிஷை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+