சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று விட்டாச்சு லீவு.. 3 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு மட்டும் “குட் நியூஸ் - உங்க ஊரும் இருக்கா?

Google Oneindia Tamil News

சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாண்டஸ் புயல் கரையை கடந்து 2 நாட்கள் கடந்துவிட்டாலும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளார்கள்.

எங்க அண்ணன்.. அன்பை அள்ளித் தருவதில் மன்னன்! தங்கை திருமணத்திற்கு அண்ணன் கொடுத்த ’சூப்பர்’ சீதனம்! எங்க அண்ணன்.. அன்பை அள்ளித் தருவதில் மன்னன்! தங்கை திருமணத்திற்கு அண்ணன் கொடுத்த ’சூப்பர்’ சீதனம்!

வானிலை நிலவரம்

வானிலை நிலவரம்

இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (14.12.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 2 நாட்கள்

அடுத்த 2 நாட்கள்

15.12.2022 மற்றும் 16.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்." என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

மழை அளவு

மழை அளவு

சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்) தலா 9, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 8, விருதாச்சலம் (கடலூர்), கோமுகி அணை, (கள்ளக்குறிச்சி), வீரகனூர் (சேலம்), மரக்காணம் (விழுப்புரம்), பாலக்கோடு (தருமபுரி) தலா 7, காஞ்சிபுரம், ஜெயம்கொண்டம் (அரியலூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 6, மயிலாடுதுறை, சின்கோனா (கோயம்புத்தூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), சோலையாறு (கோயம்புத்தூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), கொடவாசல் (திருவாரூர்), மன்னார்குடி (திருவாரூர்), திரூர் அக்ரோ (திருவள்ளூர்) தலா 5, தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), கச்சிராயப்ப (கள்ளக்குறிச்சி), ஏற்காடு (சேலம்), பொன்னனியாறு அணை (திருச்சி), அம்பத்தூர் (திருவள்ளூர்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 4, நீடாமங்கலம் (திருவாரூர்), செய்யூர் (செங்கல்பட்டு), தருமபுரி, செம்பரபாக்கம் (திருவள்ளூர்), செங்கல்பட்டு, கோத்தகிரி (நீலகிரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), பூண்டி (திருவள்ளூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), விழுப்புரம், குப்பநத்தம் (கடலூர்), விருத்தாசலம் அக்ரோ (கடலூர்), பாப்பாரப்பட்டி அக்ரோ (தருமபுரி) தலா 3, அழகரை எஸ்டேட் (நீலகிரி), லால்குடி (திருச்சி), பெரம்பூர் (சென்னை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பொன்னை அணை (வேலூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தர்மபுரி PTO, ஆனைமடுவு அணை (சேலம்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பர்லியார் (நீலகிரி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), கள்ளக்குறிச்சி, ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), கிளானிலை (புதுக்கோட்டை), ஆலந்தூர் (சென்னை), பந்தலூர் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), டிஜிபி அலுவலகம் (சென்னை), துவாக்குடி (திருச்சி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மேட்டூர் (சேலம்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), எறையூர் (கள்ளக்குறிச்சி), கங்கவல்லி (சேலம்), வடகுத்து (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), செஞ்சி (விழுப்புரம்), வொர்த் எஸ்டேட் (நீலகிரி), ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), பண்ருட்டி (கடலூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கீழச்செருவாய் (கடலூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 2, சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திருப்பத்தூர், கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தருமபுரி), சோழவரம் (திருவள்ளூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), நாமக்கல், அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), தொண்டையார்பேட்டை (சென்னை), ஹரிசன் லிமிடெட். நீலகிரி), கெட்டி (நீலகிரி), எம்ஜிஆர் நகர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம், கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), தேவிமங்கலம் (திருச்சி), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), மேல் கூடலூர் (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), திருத்தணி PTO (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), சிற்றாறு (கன்னியாகுமரி), பாரூர் (கிருஷ்ணகிரி), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), திருவாரூர், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), உதகமண்டலம் (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), சேத்தியாத்தோப் (கடலூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), ஆர்எஸ்எல்-2 நெமூர் (விழுப்புரம்), சென்னை விமான நிலையம், பையூர் AWS (கிருஷ்ணகிரி), புழல் ARG (திருவள்ளூர்), நாகப்பட்டினம்,, சமயபுரம் (திருச்சி), குமாரபாளையம் (நாமக்கல்), மங்களபுரம் (நாமக்கல்), பார்வூட் (நீலகிரி), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), விருகாவூர் (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), தேக்கடி (தேனி), சிவலோகம் (கன்னியாகுமரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), தரமணி ARG (சென்னை), திருவெண்ணெய்நாள் (விழுப்புரம்), ஆனந்தபுரம் (விழுப்புரம்), பெருந்துறை (ஈரோடு), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), நன்னிலம் (திருவாரூர்), கஞ்சனூர் (விழுப்புரம்), பழனி (திண்டுக்கல்), வளத்தி (விழுப்புரம்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), வந்தவாசி (திருவண்ணாமலை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), கிளென்மார்கன் (நீலகிரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), ஓமலூர் (சேலம்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), அமராவதி அணை (திருப்பூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), பாண்டவையார் (திருவாரூர்), நந்தனம் ARG (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி ARG (காஞ்சிபுரம்) தலா 1.

English summary
Due to continuous heavy rains, only schools have been declared closed in Chengalpattu, Kanchipuram and Thiruvallur districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X