பள்ளிகள் திறப்பு! கடலை மிட்டாய் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்! என்ன விட்ருங்க..அட்ராசிட்டி சுட்டிகள்!
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு பூங்கொத்து, சந்தனம், தேன் மிட்டாய் உள்ளிட்டவற்றை வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். பல பள்ளிகளில் வகுப்பு அறைகளில் அமர்ந்து மழலைகள் வீறிட்டு அழுத சம்பவங்கள் அரங்கேறின.
தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறை முடிந்து 1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பதையொட்டி அனைத்துப் பள்ளிகளிலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிருமிநாசினி கொண்டு பள்ளிகளை தூய்மைப்படுத்தி தயாராக வைக்கப்பட்டிருந்தன.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சீருடை அணிந்து , மாணவர்கள் பழைய மற்றும் புதிய பள்ளி தோழர்களை காணும் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு துள்ளிச் சென்றனர். பல பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் மிக்க அன்புடன் வரவேற்றனர்.

பள்ளிகள் திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் இனிப்புகள் வழங்கியும் பூ கொடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1806 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் மட்டும் 430 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. புதிய பள்ளி சீருடைகள் அணிந்தும், பாடபுத்தகங்கள் கொண்டுவரும் பைகள் புதிதாக தோளில் மாட்டிக்கொண்டு என பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமாக வருகை புரிந்தனர்.

மாணவர்கள் உற்சாகம்
ராமேஸ்வரத்தில் இயங்கி வரும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயின்ற நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து, பூக்கள் வழங்கி, பாரம்பரிய இனிப்புகளான தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் கொடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

வரவேற்ற ஆசிரியர்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 977 பள்ளிகள் உள்ளது. இதில் 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளி, அரசு நிதிஉதவி பள்ளி, மெட்ரிக் பள்ளி என அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களால் முக கவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாணவ மாணவியர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்பு வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் உற்சாகமுடன் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

பன்னீர் தெளித்து வரவேற்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு இன்று வகுப்புகள் தொடங்கின. கராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ மாணவியருக்கு பள்ளி ஆசிரியர்கள் அரசு விதிமுறைகளின்படி முக கவசம் அணிந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மாணவ-மாணவியர்களுக்கு சந்தனம் குங்குமம் பூ கொடுக்கும் பன்னீர் தெளித்து வகுப்புக்குள் வரவேற்றனர். அதை தொடர்ந்து ஒன்பது இருபது மணிக்கு வகுப்புகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு மாத கோடை விடுமுறை முடிந்து வந்த பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களது நண்பர்களை பள்ளியில் பார்த்து பரவசமடைந்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications