அழிவை நோக்கி போகும் உலகம்.. இந்த நாட்டில் இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம்! வெளியான சூப்பர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொத்த உலகமும் திடீரென பேரழிவில் சிக்கிக்கொண்டால், எந்த நாட்டிலிருந்தால் தப்பித்துக்கொள்ளலாம்? என்று பரவலாக பலருக்கும் சந்தேகம் எழலாம். இதற்கு ஏற்ற நாடுகள் எது என்பது குறித்து ஆய்வாளர்கள் பெரிய ஆய்வு நடத்தி ரிசல்ட்டை வெளியிட்டிருக்கின்றனர்.

பேரழிவு ஏற்படும்போது தங்களின் சமூக கட்டமைப்பையும் உணவு உற்பத்தியையும் தக்கவைத்துக்கொண்டு உயிர்வாழ அதிக வாய்ப்புள்ள 7 தீவு நாடுகளை பற்றி ஆய்வறிக்கையை டைம்ஸ் ஆஃப் இந்தியா வௌியிட்டிருக்கிறது.

global collapse

கடந்த 2021ல் சஸ்டைனபிலிட்டி இதழில் வெளியான ஆய்வின்படி உலகளாவிய நெருக்கடிக்கு பிறகும் தொழில்நுட்ப மற்றும் சமூக அமைப்புகளை பாதுகாக்கும் நாடுகளில் நியூசிலாந்து 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. உலகத்தின் ஓரத்தில் நியூசிலாந்து இருப்பதால், இயற்கையாகவே அது தனிமையாக இருக்கிறது. விவசாய வசதிகள் இந்நாட்டில் போதுமான அளவில் இருப்பதே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

இந்த வரிசையில் ஐஸ்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அணுசக்தி போர், பெரிய எரிமலை வெடிப்பு அல்லது விண்கல் மோதலால் வளிமண்டலத்தில் கரும்புகை சூழ்ந்து சூரிய ஒளி முற்றிலுமாக தடுக்கப்படும் மிக கடுமையான சூழ்நிலையை கொண்டு மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, வானுவாட்டு மற்றும் சாலமன் தீவுகள் ஆகிய நாடுகள் மட்டுமே தங்களின் மக்களுக்கு தேவையான அடிப்படை உணவு உற்பத்தியை தக்க வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

இதில் ஆஸ்திரேலியா மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்தது. அங்குள்ள பிரம்மாண்டமான உணவு இருப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 16069 கிலோ கலோரி உணவு தாராளமாக கிடைக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. என்னதான் இந்த நாடுகளில் இவ்வளவு பாசிட்டிவ் பாயிண்ட்கள் இருந்தாலும் கூட.. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 நாடுகளுமே உரங்கள், இயந்திரங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு இறக்குமதியையே நம்பியிருக்கின்றன.

குறிப்பாக நியூசிலாந்து எரிபொருள் தேவைக்கு 100% வெளிநாடுகளைதான் நம்பியிருக்கிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் கொண்டுள்ள ராணுவ கூட்டணிகள் காரணமாக இந்த தீவு நாடுகள் அணுசக்தி போரின் போது தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இதெல்லாம் பெரிய மைனஸ் பாயிண்டஸாக இருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.. பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்பதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+