Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை சிக்னல்" எடப்பாடிக்கு..இதுதான் அந்த சீக்ரெட்..2 ஆப்ஷனையும் கோட்டை விட்ட ஓபிஎஸ்! ஏன் தெரியுமா?

எடப்பாடி பழனிசாமி கடைசிவரை சட்டரீதியாக போராடி வெற்றி பெற்றுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி, கடைசிவரை சட்டரீதியாக போராடி, வெற்றி பெற்றுள்ளது பிற கட்சிகளையும் ஈர்த்து வருகிறது.. அத்துடன், ஓபிஎஸ் மீதான மைனஸ்கள் அதிகரித்து வருவதாகவும் சொல்லப்படுகின்றன.

Recommended Video

    ADMK-வில் அடுத்தது என்ன? OPS-க்கு சவாலாக இருக்கும் EPS

    முதல்வர் & பொதுச்செயலாளர் = என்ற இந்த இரண்டு பதவியையுமே ஜெயலலிதா கடைசிவரை விடாமல் வைத்திருந்தார்..

    சிறைக்கு செல்ல நேர்ந்தபோதுகூட அந்த பதவியை ஓபிஎஸ்-யிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாரே தவிர, திரும்பவும் தன்னிடமே அதை இறுதிவரை வைத்திருந்தார்.

     காய் நகர்த்தல்

    காய் நகர்த்தல்

    இப்படிப்பட்ட ஆளுமை நிறைந்தவரிடம் இருந்த அந்த முக்கிய பதவிதான், அதிமுக இன்று இரண்டாக பிளவுபடும் அளவுக்கு சென்றுவிட்டது.. ஜெ.போலவே, தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் ஆரம்ப கால திட்டமாக இருந்து வந்தது.. இதற்காகவே, கொங்கு மண்டலத்தையும் தாண்டி, தன்னுடைய ஆதரவை தென்மண்டலங்களிலும் நிலைநாட்ட ஆரம்பித்தார்.. சட்டசபை தேர்தலுக்கு முன்பேயே இதற்கான காய் நகர்த்தலை எடப்பாடி மேற்கொண்டதாக தெரிகிறது.

     ஓபன் டாக் இல்லை

    ஓபன் டாக் இல்லை

    அதிலும் சட்டரீதியாகவே இந்த விஷயத்தை கையில் எடுத்தார்.. ஒற்றை தலைமை என்ற விவகாரம் வெடித்தபோதே, எடப்பாடிக்கு 90 சதவீதம் மேல் ஆதரவு இருந்ததாக கூறப்பட்டு வருகிறது.. இந்த ஆதரவாளர்களை வைத்து, எடப்பாடி பழனிசாமியும் எப்போதோ, பொதுக்குழுவை கூட்டி, கட்சியை கைப்பற்றியிருக்க முடியும்.. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.. காரணம், ஓபிஎஸ் எப்போதுமே நேரடியாக தாக்கமாட்டார்.. பின்னிருந்துதான், மறைமுகமாக அரசியல் செய்வார் அல்லது தன் ஆதரவாளர்களை வைத்து அரசியல் செய்வார்..

     நள்ளிரவில் சந்திப்பு

    நள்ளிரவில் சந்திப்பு

    அப்படித்தான் இந்த விஷயத்தையும் அணுகினார்.. டெல்லிக்கு அவசர அவசரமாக ஓடினார்.. அங்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை என்றாலும், பாஜக மேலிடம் ஓபிஎஸ்ஸுக்கு பெரிய அளவுக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றே தெரிகிறது.. இரு தரப்பையும் ஒருசேர அரவணைத்து செல்லவே விரும்புவதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், ஓபிஎஸ் கோர்ட்டுக்கு சென்றார்.. நள்ளிரவில் நீதிபதியை சந்தித்து பேசியதாககூட செய்திகள் கசிந்தன.. பொதுக்குழுவில் ஒற்றை தீர்மானம் வந்து விடக்கூடாது என்பதற்காக, நள்ளிரவு 3 மணிக்கு நீதிபதியை சந்தித்து பேசியிருக்கிறார் ஓபிஎஸ் என்று அகில உலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் கே.சி. ஆணிமுத்து செய்தியாளர்களிடமே ஓபனாக சொன்னார்.

     கடைசி நிமிடம்

    கடைசி நிமிடம்

    ஆனால், அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்றுகூறி, சுப்ரீம்கோர்ட் ஏற்கனவேவே சொல்லிவிட்ட நிலையில், இன்று ஹைகோர்ட்டும் அதையே உத்தரவிட்டுள்ளது.. இது எடப்பாடிக்கு சட்டரீதியான ஆதரவை பெற்று தந்துள்ளது.. ஆக, கடைசி நிமிடம் வரை, சட்டரீதியாக மட்டுமே இந்த விஷயத்தை எடப்பாடி அணுகிய விதம் பாராட்டை பெற்று தந்து வருகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸோ, ஆரம்பம் முதல் இப்போது வரை எல்லாவற்றிலும் அடாவடி அரசியல் செய்ததை குறிப்பிட வேண்டி உள்ளது..

     ஓபன் டாக்

    ஓபன் டாக்

    பொதுவாக, எந்த விஷயத்தையும் ஓபனாக பேசாமலேயே, பேச வேண்டிய நேரத்தில் அமைதி காத்துவிடுவார் ஓபிஎஸ்.. எந்த விஷயத்திலும் உறுதிப்பாடு குறைவாக இருப்பவர் என்ற விமர்சனமும் இவர் மீது இவ்வளவு காலமாக இருந்து வருகிறது.. சசிகலா விஷயத்திலும் வழவழா கொழ கொழாதான்.. முதல்வர் வேட்பாளர் பதவி முதல் எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை எடப்பாடி முன்பு அனைத்தையும் விட்டுவிட்டு, பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறார் ஓபிஎஸ்..

     டாக்குமென்ட்கள்

    டாக்குமென்ட்கள்

    அவ்வளவு ஏன், இன்று காலைகூட, அதிமுக தலைமை அலுவலக கதவை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே சென்ற நிலையில் தடையை மீறி ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.. இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களும் கற்களை வீசி தாக்கி கொண்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுவிட்டது.. அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றி சென்றதாக தகவல் பரவியுள்ளது. இதற்கான போட்டோவும் வெளியாகியுள்ளது.

     பச்சை சிக்னல்

    பச்சை சிக்னல்

    ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அப்படி இல்லை.. டாண்..டாண்.. என எதிரிகூடாரத்தையும் வார்த்தைகளாலேயே நொறுக்கி கொண்டிருக்கிறார்.. சொந்த கட்சியிலும் சசிகலா விஷயத்தில் கறார் தன்மையை கடைப்பிடித்து வருகிறார். தன்னுடைய ஆதரவாளர்கள் யாரையுமே இதுவரை சசிகலா பக்கம் அணுகவிடாமல் இறுக்கமாக தன்பிடிக்குள் வைத்திருக்கிறார்.. இப்போது நீதிமன்ற தீர்ப்பு வரை வெற்றி பெற்றுள்ளார்.. எந்த ஒரு விஷயத்திலுமே பொறுமையையும், சாதுர்யத்தையும், துணிச்சலையும், கறார் முடிவையும் எடுக்கும் நபரையே, தலைமை பதவி தேடி வரும் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+