சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு வரவேற்பு... அதற்கும் நீதி வேண்டும்.. சீமான் எழுப்பிய கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அறவழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்ற காவலர்கள், காரணமான அரசு அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு என்ற தீர்ப்பை போல் 13 பேரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைத்தால் சரியாக இருக்கும் என்றும் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

Recommended Video

    Sterlite ஆலையை மீண்டும் திறக்க கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி

    2018 மே 22 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.2018 மே 28 ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது.

    அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது.

    தொழில்முனைவோரெல்லாம் அதிர்ச்சியா இருக்காங்களாம்.. அப்பீல் போகப் போகுதாம் ஸ்டெர்லைட்!தொழில்முனைவோரெல்லாம் அதிர்ச்சியா இருக்காங்களாம்.. அப்பீல் போகப் போகுதாம் ஸ்டெர்லைட்!

    உயர் நீதிமன்றத்தை அணுக

    உயர் நீதிமன்றத்தை அணுக

    உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

    2019 பிப்ரவரி 27 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2019 ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணை நடைபெற்றது இந்த வழக்கில் தமிழக அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என வாதங்களை எடுத்து வைத்தார்கள் வேளாண் நிறுவனம் சார்பாக திறக்க வேண்டும் என்று வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மனுதாரர்கள் இந்த ஆலையை திறக்க கூடாது என பாதிப்புகள் குறித்து வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்து வைத்தனர்

    ஆலையை மூட உத்தரவு

    ஆலையை மூட உத்தரவு

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அவர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது எனவும் அந்த ஆலைக்கு பூட்டி சீல் வைத்தது சரி என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.

    சீமான் கேள்வி

    சீமான் கேள்வி

    இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அறவழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்ற காவலர்கள், காரணமான அரசு அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்திருந்தது. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்று முடிவை எடுத்தது. அப்படி எடுத்த அரசின் முடிவிற்கு ஆதரவாக வலுசேர்க்கும் விதமாக மக்கள் போராடினார்கள். அவர்கள் மீது அரசு துப்பபாக்கிச்சூடு நடத்துமா? என்ற கேள்வி எழுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட மக்களின் நினைவைக்கூடஅடுத்தடுத்த ஆண்டுகளில் போற்ற முடியாத நிலை இருக்கிறது.

    கலவரம் எப்படி நடக்கும்

    கலவரம் எப்படி நடக்கும்

    இதில் எழும் கேள்வி என்னவென்றால் மனு கொடுக்க போகும் இடத்தில் முன்கூட்டியே கணித்தார்கள். அப்படியே கலவரம் வந்தால் கூட கண்ணீர் புகை குண்டு வீசலாம். தண்ணீரை பீய்ச்சி அடிக்கலாம். பிளாஸ்டிக் குண்டுகளை வைத்து சுடலாம். விண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கட்டுப்படுத்தலாம். தடியடி நடத்தி கலைக்கலாம். ஆனால மிகவும் அருகில் சுட்டு வீழ்த்த வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று சாதாரண மக்கள் கூட கேட்கிறார்கள். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் நான் கூட சென்று சாட்சியம் அளித்தேன். ஆனால் ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. ஆலையை திறக்க அனுமதி மறுப்பு என்ற தீர்ப்பை போல் 13 பேரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைத்தால் சரியாக இருக்கும். உச்ச நீதிமன்றத்திலும் இதே தீர்ப்பு வர வேண்டும். இந்ததீர்ப்பை முழுமனதாக வரவேற்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Seaman insisted that justice would be served if justice was served for the deaths of 13 people, similar to the verdict denying permission to open the Sterlite plant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X