சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற்று கலையுலகப் பயணத்தைத் தொடர வாழ்த்துக்கள் - சீமான்

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினிகாந்தின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சீமான்.

Seeman welcomes Rajinikanths political decession

வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன். அதற்கான தேதியை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்தார். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக செய்திகள் வெளியானது முதல் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார் சீமான்.

வேற்று மொழிக்காரர் என்பதால் அவர் எப்படி என் மண்ணை ஆள வரலாம் என்றே ரஜினிக்கு எதிராக சீமான் எதிர்குரல் எழுப்பி வருகிறார். ரஜினி அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாலே கோபத்தோடுதான் பதில் கொடுப்பார் சீமான்.
ரஜினியையும், கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில இனி எந்த நடிகனுக்கும் அரசியல் ஆசை வரக்கூடாது என்று ஆவேசம் காட்டி வந்தார் சீமான்.

இந்நிலையில், தன் உடல் நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்கப்போவதில்லை என்று இன்று அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த். நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள் என்று அறிவித்து கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

Seeman welcomes Rajinikanths political decession

ரஜினியின் இந்த முடிவினை வரவேற்றுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். சீமான்.

முன்னதாக ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது,அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியிருந்தார் சீமான். இப்போது ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamil Party co-ordinator Seeman said he fully welcomed Rajinikanth's decision not to start a political party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X