6 தொகுதிகளில் பிராமண வேட்பாளர்கள்.. சீமான் போடும் புது ரூட்! நாம் தமிழர் கட்சியின் கணக்கு இதுதானா!
சென்னை: கடந்த 21ம் தேதி திருச்சியில் நடந்த மாநாட்டில் வைத்து கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த பட்டியலில் 6 பேர் பிராமணர்கள் இடம்பிடித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
வழக்கமாக அதிமுக-பாஜக கூட்டணி சார்பில்தான் பிராமணர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். ஆனால் அந்த கூட்டணியையும் ஓவர் டேக் செய்யும் அளவுக்கு சீமான் தனது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.

கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட மொத்த வேட்பாளர்களில் 50% பெண்கள். வழக்கமாக பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி, சரிசமமான முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. அதேபோல இந்த வேட்பாளர்கள் பட்டியலில் பிராமணர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
அதாவது சென்னை தி.நகரில் அனுஷா, மயிலாப்பூரில் அருண், சைதாப்பேட்டையில் ஸ்ரீவித்யா, ஆலந்தூரில் மகாலட்சுமி, மதுரவாயலில் ரேவதி, மயிலாடுதுறையில் காசிராமன் என மொத்தம் 6 தொகுதிகளில் பிராமணர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இது சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, பிராமணர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் தோராயமாக 2-3% வரை இருக்கும்.
அப்படியெனில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 7 தொகுதிகளில் பிரதிநிதித்துவம் கொடுக்கலாம். இந்த பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில்தான் 6 பிராமண வேட்பாளர்களை சீமான் களமிறக்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. பெண்கள், மற்ற சமூகத்தினர் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் இது என்று நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், அதெல்லாம் கிடையாது, பிரமணர்களின் வாக்குகளை குறி வைத்து பிறிப்பதற்காகவே இப்படி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்று விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
இது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், "சீமானின் உண்மையான சமூக நீதி" என்று பாராட்டியுள்ளார். அதேபோல, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், "சமூக கலாசார பண்பாட்டு பெருமைமிக்க பிராமண சமுதாய மக்களின் ஓட்டுக்களை பாஜக-அதிமுகவிடமிருந்து பிரித்து தன் பக்கம் கொண்டு செல்ல சீமான் மேற்கொண்டிருக்கும் முயற்சிதான் இது.
இது திமுகவை வெற்றியடைய வைக்கும் யுக்தி, இவர்கள் என்ன கதறினாலும் படித்த பண்பட்ட பிராமண சமூகத்தினர் இவர்களுக்கு ஓட்டுபோட மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications