என்னைய போய் பெஞ்ச்ல உட்கார வச்சிருக்கீங்க! மன்னனை பார்க்க ஜன்னலும் இல்லை! செல்லூர் ராஜூ ஆக்ரோஷம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக நிர்வாகி மன்னன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரைப் பார்ப்பதற்காக மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்ற செல்லூர் ராஜூ நீண்ட நேரம் உட்கார வைக்கப்பட்டிருந்ததால் கடும் கோபமடைந்தார்.

தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏ முஸ்தபாவிடம் அதிமுக முன்னாள் துணை மேயர் மன்னன் ரூ. 30 கோடி பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமும் முஸ்தபாவின் உதவியாளரிடமும் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Sellur Raju

இந்த நிலையில் மன்னனை பார்க்க அதிமுக உள்ளூர் நிர்வாகிகளுடன் செல்லூர் ராஜூ சென்றிருந்தார். அங்கு மன்னனை பார்க்க அதிகாரியிடம் அனுமதி வாங்கிவிட்டு சொல்வதாக அவர்களை நீண்ட நேரமாக அங்கிருந்த பெஞ்சில் உட்கார வைத்திருந்தனர்.

இதனால் கோபமடைந்த செல்லூர் ராஜூ போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார். அவர் கூறுகையில், ஆட்சி மாறினால் எல்லாமே மாறிடுமா? ஒரு மரியாதை இல்லையா, இவர் முன்னாள் எம்எல்ஏ, அவரு மாநில நிர்வாகி, நான் முன்னாள் அமைச்சர் எவ்வளவு நேரமாக பெஞ்சில் உட்கார வைத்திருக்கிறீர்கள்.

மன்னன் என்ன தீவிரவாதியா, ஒரு ஜன்னல் இருந்தால் கூட அவரை பார்த்துட்டு போயிருப்போம், அதுவும் இல்லை, நாங்கள் அவரை பார்த்துட்டுதானே போகறோம்னு சொல்றோம். அவரை என்ன இழுத்துகிட்டா போக போறோம்? உங்களை மீறி போக முடியுமா?

நானும் 10 வருஷம் அமைச்சராக இருந்திருக்கேன். நாங்கள் பார்க்கலாமா, வேண்டாமா என்பதை அதிகாரிகளிடம் போனில் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்? ஒரு மரியாதை இல்லையா? என கடுமையாக கொந்தளித்தார்.

தவெக ஆட்சியை கவிழ்க்க மதுரை மத்திய தொகுதியின் தவெக எம்எல்ஏ முஸ்தபாவுக்கு ரூ 30 கோடியை இரு தவணைகளாக தருவதாக பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகி மன்னனை மதுரை மாட்டுத்தாவணி அருகே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னன் கைது நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டனத்தில் கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னனை பொய் வழக்கில் கைது செய்துள்ள தவெக அரசின் ஏவல்துறைக்கு எனது கடும் கண்டனம்.

குதிரை பேரம் நடத்தி, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக சட்டமன்ற உறுப்பினரை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சி தான் தவெக தெரிவித்துள்ளார். அது போல் அதிமுக மாநிலங்களவை எம்பி இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனுக்கு BNSS பிரிவு 35(3)-ன் கீழ் நாளை (07.11.2026) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஆனால், அவர் நாளை விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே இன்று காலை அவரைக் அவசரமாக கைது செய்திருப்பது ஏன்?

Satender Kumar Antil v. CBI (15.01.2026) வழக்கில், 7 ஆண்டுகள் வரை தண்டனைக்குரிய குற்றங்களில் BNSS பிரிவு 35(3)-ன் கீழ் நோட்டீஸ் வழங்குவதே விதி; கைது என்பது விதிவிலக்கு என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நோட்டீஸ் வழங்கிவிட்டு, அவர் ஆஜராக தயாராக இருந்தும், ஆஜராக வாய்ப்பு அளிக்காமல் ஒரு நாளுக்கு முன்பே அவரை கைது செய்திருப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் BNSS சட்டத்தின் நோக்கத்திற்கும் முரணானதல்லவா?

இந்தக் கைது எதற்காக? யாருடைய அழுத்தத்தின் பேரில் இந்த நடவடிக்கை? சட்டங்களும், நீதிமன்ற தீர்ப்புகளும் தவெக அரசை கட்டுப்படுத்தாதா? தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது எதேச்சதிகாரத்தின் ஆட்சியா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+