சீனாவை ஆட்டம் காண வைக்க போகும் குட்டி தமிழக நகரம்.. சென்னையும் இல்லை, கோவையும் இல்லை.. சர்ப்ரைஸ்!
சென்னை: செமிகண்டக்டர் துறையில் அமெரிக்காவும் சீனாவும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா இப்போது தான் இந்தத் துறையில் நுழைந்துள்ள நிலையில், தமிழக நகரம் ஒன்று இதில் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. பல வல்லுநர்கள் பார்வை இந்த நகரம் பக்கம் திரும்பியுள்ள நிலையில், இது சர்வதேச நகரமாகச் சீக்கிரமே மாறும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
இப்போது சர்வதேச அளவில் செமிகண்டக்டர் முக்கியமானதாக இருக்கிறது. எதிர்காலத் துறைகளாகக் கருதப்படும் பலவற்றில் செமிகண்டக்டர் அத்தியாவசியமானதாக இருக்கிறது. இப்போது தான் இந்தியா இந்தத் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. அதிலும் சர்ப்ரைஸாக இந்தக் குட்டி நகரம் செமிகண்டக்டர் ஸ்டார்ட்அப் ஹப்பாக உருவெடுத்துள்ளது.

தென்காசி
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டின் இந்தச் சிறிய நகரிலிருந்து செமிகண்டக்டர் ஸ்டார்ட்அப் அறிவிப்பு வரும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்போது மெல்ல தென்காசியில் செமிகண்டக்டர் ஸ்டார்ட்அப் ஹப்பாக மாறி வருகிறது. விவசாயத்துக்கும், சீசன் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்ற தென்காசி, இப்போது சிப் வடிவமைப்பு மையமாக மாறி வருகிறது.
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் செமிகண்டக்டர் இன்ஜினியரிங் இயக்குநர் ஆனந்தன் அய்யாசாமி, தென்காசி மாவட்டத்தில் "தென்காசி செமிகண்டக்டர்கள்" (Tenkasi Semiconductors) என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தென்காசி போன்ற ஒரு சிறிய நகரத்தில் இத்தகைய முயற்சி அசாதாரணமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது.
செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு
ஏனெனில், செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு என்பது சாதாரண வேலை இல்லை. வழக்கமான ஐடி வேலைகளைக் காட்டிலும் சிக்கலானது. சிப் வடிவமைப்பிற்கு அதிக நிபுணத்துவம் தேவைப்படும்.. சிக்கலான வேலை என்பதால் இவை வழக்கமாகச் சர்வதேச தொழில்நுட்ப மையங்களிலேயே நடக்கும். மேலும், சர்வதேச வல்லுநர்களும் தேவைப்படுவார்கள். இதன் காரணமாகவே தென்காசி செமி செமிகண்டக்டர் நிறுவனத்தின் முயற்சி உற்று நோக்கப்படுகிறது. இப்போது வெளிநாடுகள் மற்றும் வெளி நகரங்களில் பணிபுரிந்து வந்த வல்லுநர்கள் தென்காசி நோக்கி வருகிறார்கள்.
சிப் வடிவமைப்பு
செமிகண்டக்டர் துறையில் சிப் உற்பத்தி (fabrication) மற்றும் சிப் வடிவமைப்பு (design) என இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. சிப் உற்பத்தி என்பது பெரிய தொழிற்சாலைகளில் செமிகண்டக்டர் சிப்களை தயாரிப்பதைக் குறிக்கிறது. இதற்கு அதிக முதலீடும், பிரமாண்டமான உள்கட்டமைப்பும் தேவைப்படுவதால், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய உற்பத்தி ஆலைகளை இயக்க முடியும்.
எனவே, தென்காசி சிப்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தாமல், சிப் வடிவமைப்பில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம், சிப்பின் டிஜிட்டல் ப்ளூபிரிண்ட் அல்லது வடிவமைப்பை உருவாக்கி, அதைக் குஜராத்தில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்ப முடியும். தேவை என்றால் வெளிநாடுகளில் கூட இதை உற்பத்தி செய்யலாம். அதிகச் செலவு வைக்கும் உற்பத்தி ஆலையைக் கட்டுவதற்குப் பதிலாக சிப் வடிவமைப்பில் கவனம் செலுத்த ஆனந்தன் முடிவு செய்துள்ளார். இது உயர்நிலை தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதோடு, மதிப்புமிக்க அறிவுசார் சொத்துக்களையும் உருவாக்குகிறது.. நிபுணத்துவத்தையும் மேம்படுத்துகிறது.
ஜோஹோ
ஆனந்தன் மட்டும் தென்காசியில் புதிய முயற்சியை எடுக்கவில்லை. ஜோஹோ நிறுவன நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தென்காசியில் ஒரு வலுவான தொழில்நுட்பச் சூழலை உருவாக்கி வருகிறார். உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களைக் கிராமங்களிலிருந்தும் சிறிய நகரங்களிலிருந்தும் உருவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.
தென்காசியின் இந்த மாற்றத்திற்கான அடித்தளம் 2011இல் தொடங்கியது. அப்போது ஜோஹோ நிறுவனம் மாத்தளம்பாறை கிராமத்தில் வெறும் ஆறு ஊழியர்களுடன் ஒரு சிறிய அலுவலகத்தைத் திறந்தது. கிராமப்புறங்களில் சர்வதேச தரத்தில் திறமையான ஊழியர்கள் இருக்க மாட்டார்கள் எனப் பலரும் இந்த யோசனையை முதலில் சந்தேகப்பட்டனர். சென்னை அல்லது பெங்களூர் போன்ற பெரிய நகரங்களே தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சரியாக இருக்கும் என்று பலரும் கருதினர். ஆனால், ஜோஹோ அதை மாற்றி காட்டியது.
சர்வதேச நகரமாக மாறும்
பெரு நகரங்களில் இருந்து மட்டும் ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களை அடையாளம் காண்பதில் ஜோஹோ கவனம் செலுத்தியது. இன்று தென்காசி பிராந்தியத்தில் சுமார் 1,200 பேருக்கு ஸோஹோ வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் நீட்சியாகவே "தென்காசி செமிகண்டக்டர்கள்" நிறுவனம் உருவாகிறது.! சீக்கிரமே உலக ஐடி சந்தையில் தவிர்க்க முடியாத இடமாக தென்காசி மாற வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
-
இனி வருமான வரியே இருக்காது.. எல்லோருக்கும் '0'டாக்ஸ்.. மிகப்பெரிய மாற்றம் வரபோகுது! -
டிசிஎஸ் நாசிக்: 30 நாள் போலீஸ் அன்டர்கவர் ஆப்ரேஷன்.. அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications