“ஒரு மந்தையில் இருந்து பிரிந்த 2 ஆடுகள்”.. பனையூரில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகளான செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் இன்று பனையூரில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தபோது சந்தித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கென தனியிடத்தைப் பிடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

tvk Vijay sengottaiyan nanjil sampath

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, அக்கட்சியின் தலைவர் விஜய் பொதுவெளியில் பெரிதும் தலைகாட்டாமல் இருந்த நிலையில் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு, நடக்கும் முதல் ஆலோசனை கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னதாக சமீபத்தில் செங்கோட்டையன், தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரும் அதிமுகவில் இருந்து வந்த நிலையில், நாஞ்சில் சம்பத், 6 ஆண்டுகளுக்கு முன்பே விலகினார். இந்நிலையில் அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்து முக்கிய பொறுப்புகளைப் பெற்ற நிலையில், சில நாட்களிலேயே நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்தார். இந்நிலையில், செங்கோட்டையனும் நாஞ்சில் சம்பத்தும் இன்று சந்தித்துப் பேசிக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறுகையில், "விமர்சனங்களால் வளர்ந்தவன். முதன்மை சக்தியாக இருக்கிற தவெகவை வெற்றி சமவெளிக்கு கொண்டு வர துப்பாக்கியின் ஓசையை விட அதிகமாகவும் ஒரு புயலின் வேகத்தோடும் பயணிப்பதற்கு கனவுகளோடு களத்திற்கு வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக, திமுக, அதிமுக என தமிழகத்தின் பல்வேறு முன்னணி திராவிட கட்சிகளில் நட்சத்திர பேச்சாளராகப் பயணித்தவர் நஞ்சில் சம்பத். கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்த இவர் இனி இலக்கிய மேடைகளில் மட்டுமே என்னைப் பார்க்க முடியும் என்ற அதிரடியாக அறிவித்தார்.

அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட நாஞ்சில் சம்பத் அண்மையில் தன்னை விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார். தமிழக அரசியலில் நல்ல பேச்சாற்றல் கொண்டவர்களில் ஒருவராகக் கருதப்படும் நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரைச் செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+