செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி வயிற்றில் கரைத்த 10 புளி.. அதிமுக பக்கம் போட்ட குண்டு.. அடுத்து என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழகத்துக்கு வரத் தயாராக இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.. இது வெறும் அரசியல் விமர்சனமா? அல்லது அதிமுகவுக்குள் உண்மையில் நிலவும் அதிருப்தியின் வெளிப்பாடா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதையடுத்து எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

மூத்த தலைவர் செங்கோட்டையன் நேற்று கோபிச்செட்டிபாளையத்தில் பேசியபோது, "தவெகவிற்கு எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்களாம். விலைக்கு வாங்குவதற்கு இது ஆட்டுச் சந்தை அல்ல. தவெக எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் தலைவர் விஜய் எங்கே குதிக்கச் சொன்னாலும் யோசிக்காமல் குதிப்பார்கள்

Sengottaiyan Edappadi Palanisamy AIADMK AIADMK Politics

திருப்பூர், ஈரோடு பேச்சுக்கள்

அதிமுகவில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு வரத் தயாராக இருக்கிறார்கள். ஏற்கனவே 6 பேர் தவெகவுக்கு வந்துவிட்டனர். மேலும் 10 பேர் வருவதற்கு ரெடியாக உள்ளனர். மொத்தமாக 25 பேர் ஒன்றாக வரத் தயாராகிவிட்டனர், இன்னும் 6 மாதங்களுக்குள் மீதமுள்ளவர்களும் தவெகவை நோக்கி வருவார்கள்.. எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமைப் பொறுப்பில் நீடிக்கும் வரை அதிமுகவால் வெற்றி பெற முடியாது" என்று விமர்சித்திருந்தார்.

2 நாட்களுக்கு முன்புகூட திருப்பூரில் நடைபெற்ற தவெக கூட்டத்திலும் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்திருந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அவர்களின் வழியில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே ஆளும் வல்லமை படைத்த ஒரே சக்தி விஜய்தான் என்றும் அவர் பேசியிருந்தார்.

தொடர்ந்து அதிமுக தலைமையை விமர்சித்து வரும் செங்கோட்டையன், தற்போது 10 எம்.எல்.ஏ.க்கள் தவெகவை நோக்கி வரத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது அரசியல் ரீதியாக கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

செங்கோட்டையன் வீசிய குண்டு

ஆனால், செங்கோட்டையன் கூறியுள்ள இந்த 10 எம்.எல்.ஏ.க்கள் யார் என்பது குறித்து எந்தத் தெளிவான தகவலும் இதுவரை பொதுவெளியில் வெளியாகவில்லை. அவர்கள் உண்மையில் தவெகவுடன் தொடர்பில் இருக்கிறார்களா? கட்சி மாறும் முடிவில் இருக்கிறார்களா? என்பதற்கான உறுதியான ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.

அதனால் செங்கோட்டையனின் கூற்றை அப்படியே அரசியல் உண்மையாக எடுத்துக்கொள்வதைவிட, அவர் இந்த எண்ணிக்கையை பொதுவெளியில் முன்வைப்பதன் பின்னணியில் உள்ள அரசியல் செய்தி என்ன என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, அதிமுக ஏற்கனவே உள்கட்சி கருத்து வேறுபாடுகள், தலைமைத்துவம் தொடர்பான விவாதங்கள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஒரு மூத்த தலைவர் வாயிலாக எம்.எல்.ஏ.க்கள் விலகலாம் என்ற தகவல் வெளிவந்திருப்பது கட்சித் தலைமைக்கு நிச்சயம் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது.

3 ஆப்ஷன்கள்

ஏற்கனவே, சி.வி. சண்முகம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடந்ததாகவும், அவரை உடனடியாக நீக்காமல் பொறுத்திருக்கலாம் என மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்புக்கு இடையிலும் கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியை எடப்பாடி பழனிசாமி எப்படிக் கையாளப்போகிறார் என்பதும் முக்கியமானதாகிறது.

செங்கோட்டையன் ஏன் இப்போது 10 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தை பொதுவெளியில் பேச வேண்டும் என்பதும் கவனிக்க வேண்டிய கேள்வியாக உள்ளது. இது கட்சிக்குள் தனது அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான அழுத்தமா? அதிமுகவில் உண்மையில் உருவாகியுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் முயற்சியா? அல்லது தவெகவை நோக்கி உருவாகும் அரசியல் நகர்வுகளை முன்கூட்டியே வெளிப்படுத்தும் நடவடிக்கையா? இந்த 3 ஆப்ஷன்களையும் அரசியல் ரீதியாக புறக்கணிக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமிக்கு வந்த வேலை

ஒருவேளை செங்கோட்டையன் கூறுவது போல் அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவை நோக்கி நகர்ந்தால், அதன் தாக்கம் தனிப்பட்ட கட்சி மாற்றத்தைத் தாண்டிச் செல்லும். சட்டப்பேரவையில் அதிமுகவின் எண்ணிக்கை பலம் குறையலாம் என்பதுடன், தேர்தலுக்கு முன்பாக கட்சியின் மனநிலையிலும் தாக்கம் ஏற்படலாம்.

அதே நேரத்தில், தவெகவுக்கும் இது அரசியல் ரீதியாக முக்கியமான நகர்வாக அமையக்கூடும். ஆனால், அந்த நகர்வு உண்மையில் நடக்குமா என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது.

எனவே, அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் எம்எல்ஏக்களை தக்கவைத்துக்கொள்வது, மூத்த தலைவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை கட்டுப்படுத்துவது, தேர்தலுக்கு முன்பாக கட்சியின் ஒற்றுமையை உறுதி செய்வது என பல முனைகளில் எடப்பாடி பழனிசாமிக்கு சவால்கள் இப்போது முளைத்துள்ளன.

10 எம்.எல்.ஏ.க்கள் யார்?

அதேபோல அந்த 10 எம்.எல்.ஏ.க்கள் யார்? அவர்கள் உண்மையிலேயே தவெகவுக்கு செல்ல தயாராக இருக்கிறார்களா? அல்லது இது அதிமுக தலைமையின் மீது அழுத்தம் கொடுக்கும் அரசியல் நகர்வா? தெரியவில்லை... ஆனால், செங்கோட்டையன் வெளியிட்டுள்ள இந்த "10 எம்.எல்.ஏ.க்கள்" தகவலைவிட முக்கியமானது, அதிமுகவுக்குள் இப்படியொரு விவாதம் தற்போது பொதுவெளிக்கு வந்திருப்பதுதான்.

ஆக மொத்தம், தேர்தல் நெருங்கும் சூழலில் எடப்பாடி பழனிசாமி இந்த அரசியல் சவாலை எப்படி கையாள்கிறார் என்பதே அடுத்த கட்ட தமிழக அரசியலின் முக்கியமான நகர்வாக இருக்கப்போகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+