Power Cut: மின்சாரம் 35 ரூபாய்னு பாட்டு பாடுவாரா விஜய்? செந்தில் பாலாஜி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என முதல்வர் விஜய் இப்போது பாடல் பாடுவாரா என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தவெக ஆட்சியில் மின்கட்டணமும் உயர்ந்திருக்கிறது, மின்வெட்டும் இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூறியிருப்பதாவது: மின் தடை குறித்த செய்தி வராத நாளே இல்லை. அரசு கூட்டங்கள், தலைமைச் செயலகம், அமைச்சர்களின் கூட்டங்கள் என மின்வெட்டு ஏற்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் தொடங்கி தலைமைச் செயலகம் வரை மின்வெட்டு நீண்டுள்ளது.

senthil balaji power cut

மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தனது துறையை தவிர்த்து மற்ற துறைகளுக்கு பதில் அளிப்பார். வெறும் ரீல்ஸை மட்டுமே முன் வைத்து ஆட்சிக்கு வந்த டம்மி முதல்வர், மக்கள் இன்னல்களை பற்றி கவலைப்படவில்லை.

மின்வெட்டு

மின்வெட்டுக்கு பியூஸ் கேரியர் திருட்டு என்றார்கள், பிறகு பஞ்சாப் சென்று பாருங்கள் என்றார்கள், தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மின்வெட்டு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.

திமுக ஆட்சியின் போது எந்த வித தடையும் இன்றி சீராக மின்விநியோகம் செய்யப்பட்டது. தவெக ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்களாகியும் மின்வெட்டை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரம் கொள்முதல் செய்ய நவம்பர், டிசம்பரிலேயே ஏற்பாடு செய்து டெண்டர் விடுவோம்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்துக் கொண்டே வந்தது. 5 ஆண்டுகளில் 4,349 மெகாவாட் மின்சார தேவை அதிகரித்தது. 8,600 மில்லியன் யூனிட் அளவுக்கு உபரியாக இருந்ததை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்தோம். மின்மாற்றிகள் குறைந்த அளவில் பழுதாக கூடிய நமது மாநிலத்தில் எப்படி மின்வெட்டு ஏற்படுகிறது.

திமுக ஆட்சியின்போது TANGEDCO-வின் மின் உற்பத்தி 13,000 மெகாவாட் வரை அதிகரிக்கப்பட்டது. ஆந்திராவில் மின்சாரம் கொள்முதல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அதற்குள் நான் செல்லவில்லை.

மின் உற்பத்தி

தமிழ்நாட்டின் சொந்த மின் உற்பத்திய குறைத்து வெளிச்சந்தையில் கொள்முதல் செய்வதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளார் அமைச்சர் நிர்மல்குமார்.

வெளிச்சந்தையில் யூனிட்டிற்கு ரூ35-க்கு கொள்முதல் செய்வது, மின்துறையின் ஒட்டுமொத்த நிதிநிலையை சீரழித்துவிடும். திமுக ஆட்சியில் ரூ.20க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததை விமர்சித்த தவெக, ரூ.35க்கு கொள்முதல் செய்கிறது. 2021 ஆம் ஆண்டு ரூ 20-க்கு மின்சாரம் கொள்முதல் செய்த போது Resign EB Minister-னு பதிவு போட்டாரு இன்றைய மின்துறை அமைச்சர். இன்றைக்கு அவரே ரூ 35க்கு கொள்முதல் பண்றாரு. இப்ப என்ன பண்ண போறாரு? முழுக்க முழுக்க வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

29 ஆயிரம் மில்லியன்

திமுக ஆட்சியில் மின் உற்பத்தியில் 29 ஆயிரம் மில்லியனாக உயர்த்தினோம். தமிழகத்திற்கு போக மீதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்தோம். திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் மின்உற்பத்தி 20,830 மெகாவாட்டாக இருந்தது.

ஆந்திராவிலிருந்து மின்சாரத்தை வாங்குகிறது தமிழக அரசு, சொல்வதற்கு ஒன்றுமில்லை. ரூ 35-க்கு மின்சார கொள்முதலால் மின்சார வாரியம் சீரழியும். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+