Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்புத்தூரை தட்டி தூக்க களத்தில் இறங்கிய அரசியல் காய் நகர்வு விறுவிறுப்பாகி வருகிறது.. செந்தில் பாலாஜிக்கு டஃப் கொடுக்க எஸ்.பி. வேலுமணி எடுத்த "மெகா ஸ்மார்ட் மூவ்" என்ன தெரியுமா? வழக்கம்போலவே, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்து வரும் நிலையில், இதில் யாருக்கு ஆதரவு கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.. இந்நிலையில்தான் ரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. அது என்ன தெரியுமா?

தேர்தல் நெருங்க நெருங்க வேட்பாளர்களுக்கு வேலை கொஞ்சம் கூடத்தான். வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் வடை சுடுவது, வாய்க்கால் அடைப்பு எடுப்பது, டீ போடுவது, புரோட்டா போடுவது, துணி துவைப்பது, தூளி ஆட்டுவது என வாக்காளர்களின் குடும்பங்களில் ஒருவராகவே மாறிவிடுகிறார்கள் வேட்பாளர்கள்.

Senthil Balaji SP Velumani Coimbatore Election 2 Lakh Votes Tamil Nadu Assembly Election 2026 Rajini Fans Star Hotel Meeting Election Strategy DMK AIADMK Tamil nadu election 2026 Kongu Region Viral News 2 2026

தான் ஜெயிக்க வேண்டுமே என்பதற்காக வேட்பாளர்கள் பிரம்ம பிரயத்தனம் எடுப்பார்கள். ஆனால் அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகளுக்கோ இன்னும் வேலைப்பளு அதிகம்.

கோயம்புத்தூர் அதிமுக

அரசியல் கட்சிகளின் முக்கிய தலைகள் தாங்கள் ஜெயிப்பது மட்டுமில்லாமல், தான் சார்ந்து இருக்கும் பகுதியில் தனது மாவட்டமும் மண்டலமும் என அனைத்து வேட்பாளர்களின் வெற்றிகளையும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக பம்பரமாய் சுழன்று வேலை பார்க்க வேண்டிய கூடுதல் பொறுப்பு முக்கிய புள்ளிகளுக்கு உள்ளது.

அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் ஜரூராக களப்பணியில் இறங்கி விட்டார்கள்..

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டைதான்.. அதிலும் கோயமுத்தூர் மாவட்டத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் தான் எஸ்பி வேலுமணி. இதை உடைப்பதற்காகவே கடந்த தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும் கரூர் செந்தில் பாலாஜியை கோவையில் களம் இறக்கப்பட்டுள்ளது திமுக தலைமை. கோவை மண்டலத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டது போதாது என்று கோயமுத்தூர் மாவட்டத்திலேயே வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி.


எஸ்பி வேலுமணி வியூகம்

இதனால் இதுவரை அசால்ட்டாக ஜெயித்துவந்த கோயம்புத்தூர் மாவட்டத்தின் 20 தொகுதிகளிலும் இந்த முறை வெற்றிபெற வேண்டும் என்றால் ஓவர்டைம் வொர்க் செய்ய வேண்டிய கட்டாயம் எஸ்பி வேலுமணிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு மூவையும் மிக கவனமாகவும் தெளிவாகவும் எடுத்து வைத்து வருகிறாராம் எஸ் பி வேலுமணி.

அந்த வகையில் அவர் இப்போது ஸ்மார்ட் மூவ் ஒன்றை மேற்கொண்டு இருக்கிறார். அதாவது ரஜினி ரசிகர்களுக்கு ரகசியமாக ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்து அவர்களது ஆதரவை அதிமுக பக்கம் திருப்ப முயற்சி மேற்கொண்டு இருக்கிறார் வேலுமணி.

2 லட்சம் ரஜினி ரசிகர்கள்

கோயமுத்தூர் மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே ரஜினி ரசிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கோயம்புத்தூரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ரஜினி ரசிகர்களை ரகசியமாக வரவழைத்து அவர்களுக்கு மெகா விருந்து கொடுத்து வாக்கு சேகரித்திருக்கிறார் எஸ்பி வேலுமணி.

ரஜினிக்கு மிக நெருக்கமாக அறியப்படும் வேலுமணி ரஜினியை எப்பொழுது வேண்டுமானாலும் நேரில் சந்திக்கும் செல்வாக்கு பெற்றவர். அதனால் எஸ்.பி வேலுமணியின் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

கோவை வேலுமணிக்கு புது தெம்பு

மேலும் ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என எஸ்பி வேலுமணி ரஜினி ரசிகர்களிடம் உருக்கமாக பேசியதோடு, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாராம் எஸ் பி வேலுமணி. இதற்கு பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து விட்டார்களாம்.. இதைக்கேட்டதும் புது தெம்போடு வலம் வருகிறாராம் எஸ்பி வேலுமணி.

செந்தில் பாலாஜியை எதிர்கொள்ள இன்னும் என்னென்ன மூவ்களை எடுக்க வேண்டும் என தீவிரமாக யோசித்து காய் நகர்த்தி வருகிறாராம் எஸ்பி வேலுமணி

செந்தில் பாலாஜி விட மாட்டாரே

அதிமுக மூத்த தலைவர் எஸ்பி வேலுமணி முன்னெடுத்துள்ள இந்த ரகசிய வியூகம், நடுநிலை வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.. குறிப்பாக 2 லட்சம் வாக்குகள் என்பது வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால், இது செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய சவாலாகவே அமையும்..

ஆனால், தேர்தல் களத்தில் எஸ்பி வேலுமணியை விட ஒருபடி மேலே யோசிக்கும் செந்தில் பாலாஜி, இதற்கு செக் வைக்க ஏற்கனவே கரூரில் கையாண்ட பூத் கமிட்டி மற்றும் வீடு வீடாகச் செல்லும் நுணுக்கமான "மைக்ரோ மேனேஜ்மென்ட்" முறையை கோவையிலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது..

மைக்ரோ மேனேஜ்மெண்ட்

ரஜினி ரசிகர்களின் வாக்குகள் சிதறாமல் இருக்க, அவர்களின் உள்ளூர் கிளை நிர்வாகிகளை வளைப்பது அல்லது அரசு நலத்திட்டங்கள் நேரடியாக சென்றடைந்த பயனாளிகளின் லிஸ்ட்டை வைத்து அவர்களின் ஆதரவை உறுதி செய்வது என செந்தில் பாலாஜி எதிர் வியூகம் அமைக்கக்கூடும் என்றே தெரிகிறது..

அதுமட்டுமல்ல, மேலும், ரஜினி ரசிகர்கள் எப்போதும் ஒருமித்த முடிவை எடுப்பவர்கள் அல்ல என்பதால், அவர்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக தரப்பில் இருந்து திரைமறைவு பேச்சுவார்த்தைகள் மற்றும் வலுவான தேர்தல் வாக்குறுதிகள் முன்வைக்கப்படலாம்.. எப்படி பார்த்தாலும், கோவையில் இந்த 2 ஜாம்பவான்களுக்கும் இடையேயான "பொலிட்டிக்கல் கேம்" இப்பவே தகதகன்னு கொதிக்க ஆரம்பித்து விட்டது...!!

- சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+