இதே வழக்கம்தான் போல.. இதற்கு முன்பே ரயிலில் வடமாநில இளைஞரை தாக்கிய அந்த சிறுவர்கள்.. கொடூரம்!
சென்னை: சென்னை புறநகர் ரயிலில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரைத் தாக்கியதாக நான்கு சிறுவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமன்றி மொத்த நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் அந்த சிறுவர்கள் இதற்கு முன்பே இப்படி செய்து அதை ரீல்ஸ் வெளியிட்டதும் தெரிய வந்துள்ளது.
திருத்தணியை நோக்கிச் சென்ற ரயில் பெட்டிக்குள், சிலர் அரிவாளுடன் மிரட்டி வடஇந்திய தொழிலாளியைத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாக்குதலில் ஈடுபட்ட சிறுவன், பாதிக்கப்பட்ட தொழிலாளி அருகே 'வெற்றிக் குறி' காட்டி நின்றது, இன்ஸ்டாகிராம் ரீலாகப் பகிரப்பட்டு வைரலானது. ஒடிசாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் கத்தியை காட்டி மிரட்டுவது போல ரீல்ஸ் எடுத்த சிறுவர்கள், அப்போது ஏற்பட்ட தகராறில் வட மாநில இளைஞரை, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று தாக்கி உள்ளனர். கொடூரமாக ரத்தம் சொட்ட சொட்ட அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், போலீசார் 4 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வேலை பார்த்து வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் என்ற புலம்பெயர் தொழிலாளியைத்தான் நான்கு சிறுவர்கள் அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிராஜ், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய நான்கு சிறுவர்களில், மூவர் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். நான்காவது சிறுவன் தனது படிப்பைக் காரணம் காட்டி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டான்.
நான்கு பேருக்கும் பிணை
கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொடூரமாக இந்த தாக்குதல்களை அந்த சிறுவர்கள் மேற்கொண்டு உள்ளனர். வடமாநில இளைஞர் கெஞ்சி கேட்டும் அவரை கொடூரமாக தாக்கும் சிறுவர்கள், இந்த காட்சிகளை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. வட மாநில இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிவிட்டு, சிறுவன் ஒருவன் வெற்றிச் சின்னத்தைக் காட்டிய காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
முதலில் அந்த சிறுவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜை கத்தியை காட்டி மிரட்டி.. அதை ரீல்ஸ் எடுத்துள்ளனர். ஆனால் சிராஜ் ஒரு கட்டத்திற்கு மேல் அதை தட்டிக் கேட்டதால் இவர்கள் அவரை மோசமாக தாக்கி உள்ளனர். கத்தியை காட்டி மிரட்டி அப்படியே ரயிலில் இருந்து அவரை இறக்கி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமன்றி மொத்த நாட்டையே உலுக்கி உள்ளது. மொத்த தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக இந்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.
முன்பே செய்திருக்கிறார்
இந்த நிலையில்தான் அந்த சிறுவர்கள் இதற்கு முன்பே இப்படி செய்தது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பே ரயிலில் கத்தியை வைத்து வடஇந்திய இளைஞர் ஒருவரை மிரட்டி உள்ளனர். அவரை தாக்குவது போல.. அல்லது லேசாக தாக்குவது போல பாவனை காட்டி உள்ளனர். பின்னர் அதை வீடியோவும் எடுத்து ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் அத்துமீறுவதை இவர்கள் வழக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இதை வழக்கமாக வைத்திருந்திருக்கலாம்.. இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications