தங்கம் தங்கம் தான்.. வெள்ளி வெள்ளி தான்! கிலோ கணக்கில் வாங்கியவர்களுக்கு ஆப்பு! இவ்வளவு நஷ்டமா?
சென்னை: தங்கத்தை விட்டுவிட்டு வெள்ளியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கணக்குப் போட்டவர்களுக்கு இப்போது பெரிய அதிர்ச்சி தான் மிஞ்சியிருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் ஒரு கிராம் ரூ.350க்கு விற்பனையான வெள்ளி, இன்று (அக்டோபர் 31ஆம் தேதி) நிலவரப்படி ரூ.210 ஆகக் குறைந்துள்ளது. இதனால், அப்போது 10 கிலோ வெள்ளி வாங்கிய ஒருவர், தற்போதைய விலையுடன் ஒப்பிடும்போது ரூ.14 லட்சம் வரை இழப்பைச் சந்திக்க நேரிட்டுள்ளது. அப்படி என்ன தான் நடந்தது வெள்ளி சந்தையில்?
கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 57 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது. மாதங்கள் செல்ல செல்ல அதன் விலை அதிகரித்து ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த வருடம் தங்கம் பெரிதாக கை கொடுக்காத நிலையில் பலரும் வெள்ளியை தான் தேர்வு செய்தனர்.
ஆனால் வெளியில் முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. கடந்து பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி என்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 350 ரூபாய் வரை அதிகரித்து இருந்தது. நீங்கள் ஒரு கிலோ வெள்ளியை வாங்க வேண்டும் என்றால் அப்போதைக்கு 3.50 லட்சம் ரூபாயை செலவு செய்திருக்க வேண்டும்.

வெள்ளி
எலக்ட்ரிக் வாகனங்கள், சோலார் பேனல்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு வெள்ளி தேவைப்படும் என்பதால் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்தது அப்போது.. இதை அடுத்து தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வது அதிக லாபம் தரும் என பலரும் ஐடியா கொடுத்தனர். இதனால் வெள்ளி சந்தையில் ஒரு திடீர் பூம் உருவானது. பலரும் வெள்ளி வாங்கவே ஆர்வம் காட்டினர்.
வெள்ளி விலை
வருங்காலத்தில் வெள்ளி விலை இன்னும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் கிலோ கணக்கில் வாங்கி சேகரிக்க தொடங்கினர். அப்போதைக்கு வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது விலை சரிவடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 210 என உள்ளது. அதாவது பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஒரு கிராமுக்கு 140 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இவ்வளவு நஷ்டமா?
எனவே பிப்ரவரி மாதத்தில் நீங்கள் ஒரு கிலோ வெள்ளியை வாங்கி இருந்தால் இப்போது உங்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும். முதலீட்டு நோக்கத்தில் 10 கிலோ வெளியே பிப்ரவரி மாதத்தில் நீங்கள் வாங்கி இருந்தால் தற்போது உங்களுக்கு 14 லட்சம் ரூபாய் நஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது .ஒரு கிலோவுக்கு 1.40 லட்சம் என்ற அளவில் பார்க்கும்போது பத்து கிலோவுக்கு 14 லட்சம் .இதுவே ஒருவர் 100 கிலோவை வாங்கி இருந்தால் கிட்டத்தட்ட 1 கோடியே 40 லட்சம் ரூபாய் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.
விலை ஏற்ற இறக்கம்
இதனால் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தங்கம் போலவே வெள்ளி வாங்கும்போதும் கட்டிகளாக வாங்கினால் மட்டுமே இந்த விலை. ஒருவேளை வெள்ளி பொருட்களாகவோ, நகைகளாகவோ நீங்கள் வாங்கி இருந்தால் விற்பனை விலை, செய்கூலி, வரிகள் ஆகியவற்றை பொறுத்து பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வெள்ளி என எந்த பொருளில் முதலீடு செய்தாலும் விலை ஏற்ற இறக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் .இல்லையென்றால் இப்படித்தான் ஆபத்தாக முடியும் என எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.




Click it and Unblock the Notifications
