சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காட்டு பகுதியில்.. லுங்கியை தூக்கி கட்டி.. சிம்புவின் "அந்த" வீடியோவால் பரபரப்பு.. வெடித்தது சர்ச்சை

சிம்பு பாம்பு பிடிக்கும் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: லுங்கியை தூக்கி பிடித்து கொண்டு.. சிம்புவின் வீடியோவால் சர்ச்சை வெடித்துவிட்டது.. சமாச்சாரமும் புகார் வரை சென்றுவிட்டது!

கிட்டத்தட்ட ரஜினி மாதிரியேதான் சிம்புவும்.. சீனில் வந்தாலும் பிரச்சனை, வராவிட்டாலும் பிரச்சனை... பேசினாலும் பிரச்சனை, பேசாவிட்டாலும் பிரச்சனை.. சில சமயங்களில் நல்லது செய்தாலும், சர்ச்சைகளின் மொத்த உருவம் சிம்பு என்றே ஆகிவிட்டது.

இவ்வளவு நாள் இல்லாமல், இப்போது மறுபடியும் சிம்புவின் பெயர் சர்ச்சையில் சிக்கி உள்ளது.. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு 22 நாட்களில் ஈஸ்வரன் என்ற படத்தை சிம்பு நடித்து முடித்துள்ளதார்.. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு, தன்னுடைய தோளில் பாம்புடன் போஸ் தந்திருந்தார்.

அமெரிக்க பிரநிதிகள் சபைக்கு தமிழரான பிரமீளா ஜெயபால் 3வது முறையாக தேர்வானார் அமெரிக்க பிரநிதிகள் சபைக்கு தமிழரான பிரமீளா ஜெயபால் 3வது முறையாக தேர்வானார்

சிம்பு

சிம்பு

இந்நிலையில் ஷூட்டிங்கின்போது, சிம்பு 2 பேரை உதவிக்கு கூப்பிட்டு கொண்டு, பாம்பு பிடித்துள்ளார்.. இதற்காக அந்த காட்டுப் பகுதி போன்ற இடத்தில், லுங்கியை தூக்கி மடித்து கட்டிக் கொண்டு, அங்கிருந்த ஒரு மரத்தில் இருந்த பாம்பை பிடித்து ஒரு சாக்கு பையில் போடுகிறார்... இந்த வீடியோதான் அவருக்கு ஏழரையை மறுபடியும் கூட்டி உள்ளது... அதேசமயம் சிம்புவின் இந்த வீடியோவும் படுவைரலாகி வருகிறது.

ஷேர்

ஷேர்

சிம்புவுக்கு பாம்பு பிடிக்க தெரியும் என்ற விஷயமே இப்போதுதான் அவரது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளதால், ஏகத்துக்கும் குஷியாகி உள்ளனர்.. அதனாலேயே வீடியோவை அவர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.. இப்படி ஷேர் செய்ததாலேயே விஷயம் வெடித்து, விலங்குகள் நல வாரியம் வரை சென்றுவிட்டது.

சிம்பு

சிம்பு

இந்த வீடியோவை பார்த்த சென்னையை சேர்ந்த விலங்கு ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் ஆன்லைனில் புகார் தந்துள்ளார்.. இதைதவிர, இந்திய விலங்குகள் நல வாரியத்திலும் தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாம்.. அந்த புகார் மனுவில், வீடியோவில் இருக்கும் பாம்பை பார்த்தால் போலியாக இல்லை.. நிஜமான பாம்பு போலவே இருக்கிறது.. பாம்புக்கு டிரக் (போதைமருந்து) தரப்பட்டிருக்கிறது.

 சர்ச்சை

சர்ச்சை

இது விலங்குகளை கொடுமைப்படுத்துவது ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த புகார்கள் செல்லவும், சிம்புவின் அந்த வீடியோ சோஷீயல் மீடியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும், பாம்பால் வம்பில் சிக்கி கொண்ட சிம்புவின் இந்த வீடியோவின் சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

English summary
Simbu again in trouble due to Snake catching Easwaran Film
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X