Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் பெயரில் இனிஷியல் இருக்கா? SIR செய்வதில் வந்த புதிய பிரச்சனை.. இது யோசிக்காத சிக்கலா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் கார்டு பெயர்கள் ஒரே மாதிரி இல்லாத காரணத்தால் தமிழர்கள் பலர் பிரச்சனைகளை சந்திக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக தென்னிந்தியர்கள் பலர் இதனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கி உள்ளனர்.

தென் இந்தியாவில், பெரும்பாலான மக்கள் இனிஷியலைப் பயன்படுத்துகிறார்கள், குடும்பப்பெயர் அல்ல. ஆனால் ஆதாரில் குடும்பப்பெயரை கட்டாயமாக்குகிறது, இது இனிஷியலை அனுமதிக்கும் என்றாலும் பலர் குடும்ப பெயரை அதில் சேர்க்க வேண்டிய கட்டாயம் தொடக்கத்தில் ஏற்பட்டது. இதனால் பலர் குடும்ப பெயரை அல்லது அப்பாவின் பெயரை தங்களின் பெயருக்கு பின் ஆதாரில் சேர்ந்தவர்.

voting vote

இதனால் சிலருக்கு ஆதாரில் இனிஷியல் இல்லாமல் குடும்ப பெயர், அப்பா பெயர் இருக்கும். ஆனால் பான் வாக்காளர் அடையாள அட்டையில் அது இருக்காது. இதனால் இரண்டும் ஒரே மாதிரி இல்லை என்ற பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இரண்டு பெயர்களும் ஒரே மாதிரி இல்லை என்ற சிக்கல்கள் தற்போது எழ தொடங்கி உள்ளன.

தமிழர்களுக்கு பெரிய சிக்கல்

தேர்தல் அடையாள அட்டையில் பெயர் மற்றும் முதலெழுத்து (இனிஷியல்) இடம்பெறுவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில், பெரும்பாலான வாக்காளர்களின் பெயருடன் முதலெழுத்து இணைந்திருக்கும். இது அவர்களின் அடையாள அட்டைகளில் ஒரு பொதுவான நடைமுறையாகும்.

ஆதார் அட்டையில் பெயர்கள் பொதுவாக முதலெழுத்து இல்லாமல் முழுப் பெயராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆதார் அட்டையில் முதலெழுத்து இல்லாத முழுப் பெயர் இருப்பதற்கும், வாக்காளர் அடையாள அட்டையில் முதலெழுத்துடன் பெயர் இருப்பதற்கும் இடையே ஒரு வித்தியாசம் நிலவுகிறது.

இந்த வேறுபாடு காரணமாக, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது பலருக்கு பெயர்ப் பொருத்தம் (Name Mismatch) குறித்த சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஆதார் அட்டைக்கு பதில் வேறு அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டி இருக்கும். அப்படிப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் சிக்கலைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

SIR 2.0 வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் 13 ஆவணங்கள்:

SIR 2.0 சரிபார்ப்புச் செயல்பாட்டின்போது அடையாளச் சான்று, வயதுச் சான்று அல்லது இருப்பிடச் சான்றாகப் பயன்படுத்தக்கூடிய 13 ஆவணங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அவை, மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதியப் பண ஆணை

உள்ளூர் அதிகாரி, வங்கி, அஞ்சல் அலுவலகம், LIC அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து ஜூலை 1, 1987க்கு முன் வழங்கப்பட்ட அரசு அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது ஆவணம், உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்

இந்திய அரசால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் மெட்ரிகுலேஷன் அல்லது கல்விச் சான்றிதழ்,

மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வதிவிடச் சான்றிதழ்,

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட வன உரிமைச் சான்றிதழ், உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட OBC/SC/ST அல்லது சாதிச் சான்றிதழ்,

பொருந்தும் இடங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து எடுக்கப்பட்ட பதிவு,

மாநில அல்லது உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவு,

அரசால் வழங்கப்பட்ட நிலம்

வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்,

ஆதார் அட்டை (அடையாளச் சான்றாக மட்டுமே, குடியுரிமைக்கு அல்ல)

ஆதார் மட்டும் போதுமான ஆதாரமாகாது . குடியுரிமை அல்லது வயதை நிரூபிக்க ஆதார் அட்டை மட்டும் போதுமானதல்ல என்று இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. SIR 2.0-க்கு ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்கும் வாக்காளர்கள், தேவைப்பட்டால் சரிபார்ப்புக்கு வேறு தகுதியான ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+