சூரிய கிரகணம்.. வானில் வேடிக்கை ஆரம்பம்.. கண்கள் பத்திரம் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
சென்னை: இந்த ஆண்டில் கடைசி சூரிய கிரகணம் உலகின் பல பகுதிகளில் தென்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் சூரிய கிரகணத்தை காண மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சூரியனையும் கிரகணம் நிகழ்வதையும் வெறும் கண்களால் பார்க்க கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் கிரகணம். நம்முடைய பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும். அமாவாசை நாளில் தான் இந்த சூரிய கிரகணம் நிகழும். மழை இல்லாமல் இருந்தால் கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம்.
பொதுவாகவே மூன்று விதமான சூரிய கிரகணம் நடக்கிறது. முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம். இன்றைய தினம் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்கிறது. முழுவதுமாக சூரியனை சந்திரன் மறைக்கும் போது பூமி இருளாகும் இது முழு சூரிய கிரகணம் எனப்படும். அதேபோல் சந்திரன் சூரியனுடைய ஒரு பகுதி மட்டும் மறைக்கும் போது ஏற்படுவது பகுதி நேர சூரியகிரகணம் ஆகும்.

வான வேடிக்கை
வானத்தில் நிகழும் அதிசய நிகழ்வான சூரிய கிரகணம் இன்று மாலை நிகழ உள்ளது. ஒரு ஆண்டு இரண்டு சூரிய கிரகணம், இரண்டு சந்திர கிரகணம் நிகழும். இதில் சில கிரகணங்கள் மட்டுமே இந்தியாவில் தென்படும். நம்முடைய நாட்டில் சூரிய கிரகணம் தென்பட்டால் மட்டுமே கிரகண தோஷம் ஏற்படும்.

சூரிய கிரகணம் எங்கெங்கு தெரியும்
இன்றைய தினம் நிகழ உள்ள சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் தென்பட உள்ளது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்படும்.

இந்தியாவில் சூரிய கிரகணம்
உலகத்தின் பல பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சூரிய கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்குத் தொடங்கும். இதனுடைய உச்சகட்ட மறைப்பு நிலை மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும்போது 5 மணி 48 நிமிடமுமாகும். இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் தெரியும் பகுதிகள்
அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவில் சூரிய கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கும். இதுதவிர மும்பை, புனே, தானே, டெல்லி, ஆமதாபாத், சூரத், ஜெய்பூர் இந்தூர், போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜயினி, மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக சூரிய கிரகணம் தென்படும்.

எங்கு குறைவாக தெரியும்
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். திப்ருகர், இம்பால், இடாநகர், கோஹிமா, சில்சார், அந்தமான் மற்றும் நிகாபார் தீவுகளில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும். திப்ருகர், இம்பால், இடாநகர், கோஹிமா, சில்சார், அந்தமான் மற்றும் நிகாபார் தீவுகளில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது.

என்ன செய்யக்கூடாது
சூரிய கிரகணத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கிரகணம் இல்லாத நாட்களில் நாம் வெறும் கண்களால் சூரியனை பார்க்க முடியாது கண்கள் கூசும். ஆனால், கிரகணத்தின்போது சூரியனை வெறும் கண்களால் எளிதாக பார்க்க முடியும். அவ்வாறு 50 முதல் 90 விநாடிகள் பார்க்கும்போது, நமக்கு தெரியாமல் சூரியனின் கதிர்கள் கண்களின் விழித்திரையின் மத்திய பகுதியை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புவோர் அதற்கான சிறப்பு கண்ணாடியை அணிந்து பார்க்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாரெல்லாம் கவனம்
கிரகண சமயத்தில் கர்ப்பிணிகள் வெளியில் செல்லக்கூடாது. கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது. கடினமான கனமான பொருட்களை தூக்கக் கூடாது. நோயாளிகளும் கிரகண நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. கிரகணத்தின்போது ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சு உடலில் படும்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கவே, சூரிய கிரகணத்தின்போது, வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications