திமுக இனி சும்மா விடாது.. ராகுல் காந்தியை வறுத்தெடுத்த சோனியா காந்தி.. கடும் பாய்ச்சல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எடுத்த கூட்டணி முறிவு முடிவு தற்போது அகில இந்திய அளவில் கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. திமுக உடனான பல ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்டு, ஆட்சியைப் பிடித்த விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் உடனடியாகக் கை கோர்த்தது.

இந்தத் திடீர் நகர்வின் மூலம் புதிய விஜய்யின் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் மற்றும் 1 மாநிலங்களவை எம்பி பதவி உடனடிப் பரிசாகக் கிடைத்தன. தமிழகத்தில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்குபெறுகிறது என்ற கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும், டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் இதற்கான எதிரொலி வேறு விதமாக உள்ளது.

Sonia Gandhi Rahul Gandhi

ராகுல் காந்தி மீது சோனியா காந்தி அதிருப்தி!

டெல்லி வட்டாரங்களின் தகவல்படி, மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தியின் இந்த முடிவின் மீது கடும் கோபத்திலும் அதிருப்தியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தில் கிடைத்த 2 அமைச்சர் பதவிகள் என்ற சிறிய லாபத்திற்காக, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியின் தூணாக விளங்கிய திமுகவின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது.. இதனால் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் நம்மை நம்புவது இல்லை.. என்பதே சோனியாவின் கவலைக்கு முக்கியக் காரணம்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் குடும்பத்திற்கு இருந்த நீண்டகால தனிப்பட்ட நட்பை முறித்துக்கொண்டு, தவெகா பக்கம் சென்றது டெல்லி மேலிடத்தின் அவசரகோல முடிவு என அக்கட்சியின் மூத்த தலைவர்களே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

தனித்து விடப்படுகிறதா காங்கிரஸ்?

ராகுல் காந்தியின் இந்தத் தவறான கணக்கீடு, இப்போது அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. நீட் விவகாரத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள காக்ரோச் ஜனதா கட்சி உடன் திமுக கைகோர்த்து, தேசிய அளவில் ஒரு மாபெரும் 3வது அணியைக் கட்டமைக்கத் தீவிரமாக இறங்கியுள்ளது.

சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும் திமுக ஆகிய மாநிலக் கட்சிகள் அனைத்தும் CJP தலைமையிலான இந்த புதிய கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. மிக முக்கியமாக, இந்த 3வது அணியில் காங்கிரஸை முற்றிலும் புறக்கணிக்க அனைத்து மாநிலக் கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.

காங்கிரஸுக்குக் காத்திருக்கும் மாபெரும் இழப்பு!

தமிழகத்தில் கிடைத்த தற்காலிக அதிகாரப் பசிக்காக, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக உருவெடுக்கவிருந்த மாபெரும் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் இப்போது தனிமைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வரும் லோக்சபா தேர்தலில் CJP - திமுக கூட்டணி, இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று களமிறங்கும்போது, மறுபுறம் தவெக - காங்கிரஸ் கூட்டணி பெரும் சவாலைச் சந்திக்கும்.

2 அமைச்சர் பதவிகள்

தவெகவுடன் இணைந்து பெற்ற 2 அமைச்சர் பதவிகள், தேசிய அளவில் காங்கிரஸின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்!

வெறும் 2 அமைச்சர் பதவி அந்த கட்சியின் மாநில எதிர்காலம், தேசிய எதிர்காலம் இரண்டையும் உடைத்து நொறுக்கும் அபாயம் உள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+