தென்மேற்கு பருவமழை சில தினங்களில் விடைபெறும்..நடப்பாண்டு 17 சதவிகிதம் கூடுதல் மழை - பாலச்சந்திரன்
தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு இயல்பை விட 17 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை விரைவில் விடைபெறப்போவதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நடப்பாண்டு பருவமழை இயல்பான அளவை விட 17 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக் காலமாகும். கடந்த ஜூன் மாதம் கேரளாவில் பெய்த மழை தமிழகத்திற்கு தென் மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கணிசமான அளவு பெய்தது.

தென்மேற்குப் பருவமழை விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கப்போகிறது. நடப்பாண்டு பருவமழை பதிவான அளவு குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 39 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது, இயல்பு அளவு 33 செ.மீ, இது இயல்பை காட்டிலும் 17% கூடுதலாக கிடைத்துள்ளதாக கூறினார்.
சென்னையை பொறுத்தவரையில் பதிவான மழை அளவு 50 செ.மீ, இயல்பான அளவு 46 செ.மீ இது இயல்பை விட 7% கூடுதலாகும் என்றார். 26 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை ஒட்டி பதிவாகி உள்ளதாகவும், 14 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாவும் ஒரு மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாக பதிவாகியுள்ளது. பெரம்பலூரில் இயல்பை விட 68% கூடுதலாக கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் உள் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறினார்.
அடுத்து வரும் இரண்டு மூன்று தினங்களுக்கு, கிழக்கு திசையிலிருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசுவதால் தற்போதைய மழை நிலவரம் தொடரும் எனவும் அக்டோபர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை குறித்த நீண்ட கால அறிவிப்பு இன்று மாலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எனவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
-
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications