ரூ.6,792 கோடி லாபம்.. தெற்கு ரயில்வே செய்த சூப்பர் சம்பவம்.. இந்தியாவிலேயே முதலிடம்
சென்னை: இந்தியாவில் மத்திய, கிழக்கு, வடக்கு, தெற்கு ரயில்வே உள்பட 18 ரயில்வே மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்தின் கீழ் பல்வேறு கோட்டங்கள் இருக்கின்றன. இதன் வருவாய் விவரம் வெளியாகி உள்ளது. இதில் கடந்த 10 மாதங்களில் தெற்கு ரயில்வே ரூ.6,792 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இந்திய ரயில்வேயில் உள்ள மற்ற மண்டலங்களை விட தெற்கு ரயில்வே வருமானம் 9.41 சதவீதம் அதிகரித்து உள்ளது. ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை கடந்த காலங்களை விட தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
இந்திய ரயில்வேயில் மத்திய, கிழக்கு, வடக்கு, தெற்கு ரயில்வே உள்பட 18 ரயில்வே மண்டலங்கள் இருக்கின்றன. இதல் ஒவ்வொரு மண்டலத்தின் கீழ் பல்வேறு கோட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. அதில் தெற்கு ரயில்வே சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ரயில்வே மண்டலம் ஆகும். இதில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இவற்றின் கீழ் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில், பயணிகள் பிரிவில் அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில் தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்திருக்கிறது. வடமாநிலங்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்கள் அதிகம் என்ற குற்றச்சாட்டு நிலவும் நிலையில், தெற்கு ரயில்வேயில் பயணிகள் முறையாக டிக்கெட் எடுத்துப் பயணிப்பதே இந்த வருவாய் உயர்விற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை ராமேஸ்வரம் (பாம்பன் பாலம்), கன்னியாகுமரி, உதகமண்டலம் (மலை ரயில்) போன்ற சர்வதேச சுற்றுலாத் தலங்களை இணைக்கும் ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைத் தூய்மையாகப் பராமரிப்பதில் தெற்கு ரயில்வே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
தென்னிந்தியாவில் அதிகப்படியான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் மண்டலங்களில் இதுவும் ஒன்று; குறிப்பாக சென்னை - மைசூர் வழித்தடம், சென்னை கோவை வழித்தடம், சென்னை திருநெல்வேலி வழித்தடம் ஆகியவை அதிக வரவேற்பைப் பெற்ற வழித்தடமாக இருக்கிறது. சிக்னல் அமைப்புகள் மற்றும் தண்டவாளப் பராமரிப்பில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் தெற்கு ரயில்வே முன்னோடியாக உள்ளது. சென்னை, எனூர் மற்றும் தூத்துக்குடி போன்ற முக்கியத் துறைமுகங்களை ரயில்வேயுடன் இணைப்பதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்திற்கு இது முக்கியமானதாக இருக்கிறது. இதன் காரணமாக வருவாய் ஈட்டுவதில் தெற்கு ரயில்வே முன்னணியில் இருக்கிறது.
இதில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் வேகமாக அதிகமாக உள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப புதிய ரயில், ரயில் நிலையங்கள் மேம்பாடு, ரயில்களின் வேகம் அதிகரிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. பயணிகள் ரயில்கள், முன்பதிவு இல்லாத பெட்டி அதிகரிப்பு மற்றும் பண்டிகை கால சிறப்பு ரயில்களை இயக்குவதிலும் தெற்கு ரயில்வே தொடர்ந்து அதிக ஆர்வம் காட்டியதால் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதனால் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ரயில்வே வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, நடப்பாண்டில் (2025-26) ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் (அதாவது கடந்த 10 மாதங்கள்) 64.662 கோடி பயணிகள் பயணித்திருக்கிறார்கள். கடந்த நிதியாண்டு (2024-25) முழுவதும் 61.022 கோடி பேர் பயணம் செய்திருக்கிறார்கள். ஆனால் நடப்பாண்டில் 10 மாதங்களில் கடந்த நிதியாண்டை விட 3.64 கோடி பேர் அதிகமாக பயணம் செய்திருக்கிறார்கள்.
நடப்பாண்டில் ரூ.6,792 கோடி வருவாய் ஈட்டியதன் காரணமாக, நடப்பாண்டில் நாடு முழுவதும் ரயில்வேயில் பயணிகள் பிரிவில் அதிக வருவாய் ஈட்டியதில் தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.6,207.85 கோடி வருவாய் தான் ஈட்டியிருந்தது. எனவே முந்தைய நிதியாண்டை விட ரூ.585 கோடி நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. இந்திய ரயில்வேயில் நடப்பாண்டில் (2025-26) ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் மற்ற மண்டலங்களை விட 9.41 சதவீதம் பயணிகள் வருவாய் தெற்கு ரயில்வேயில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டு முழுவதும் கிடைத்த வருவாயை விட, நடப்பாண்டில் 10 மாதங்களில் அதை கடந்துள்ளது. வரும் ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் பயணிகள் வருவாய் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே செல்வதற்கான முழு நடவடிக்கையை தெற்கு ரயில்வே எடுத்து வருகிறது. வருவாய் அதிக அளவில் ஈட்டும் இடமாக தெற்கு ரயில்வே திகழ்வதால், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ரயில்வே துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications