சௌமியா அன்புமணி பேச பேச வியந்த சட்டசபை.. "அவரை பார்த்து கத்துக்கோங்க".. துணை சபாநாயகரும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சௌவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்தார்... ஏற்கனவே சௌமியா அன்புமணியின் சட்டசபை பேச்சுக்கு, சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. இப்போது துணை சபாநாயகர் ரவிசங்கரும் பாராட்டு தெரிவித்துள்ளது, அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்று வருகின்றன.

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணியின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை நெட்டிசன்கள் தொடர்ந்து வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்..

Sowmya Anbumani

கடினமான, சிக்கலான விவகாரங்களைக்கூட எளிமையாகவும் சுவாரசியமாகவும் விளக்கி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சௌமியா பேசுவதாகவும், காகிதத்தில் எழுதிக்கொடுத்த உரையைப் படிப்பதற்கு பதிலாக தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை இயல்பாக முன்வைப்பதாகவும் இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சௌமியா அன்புமணி

முக்கியமாக மக்களின் பிரச்சனைகள் மற்றும் தற்போதைய முக்கிய விவகாரங்களை தொடர்ந்து சட்டப்பேரவையில் எழுப்பும் அறிவுப்பூர்வமான உறுப்பினராக சௌமியா அன்புமணி திகழ்வதாகவும் நெட்டிசன்கள் பாராட்டியபடி உள்ளனர்.

நேற்றுகூட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது மனைவியும் பாமக சட்டப்பேரவை உறுப்பினருமான சௌமியா அன்புமணியை "சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார்" என்று பாராட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி தொடர்ந்து மக்கள் பிரச்னைகளை துணிச்சலாக எடுத்துரைத்து வருவதாகவும், குறிப்பாக பெண்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் சார்ந்த முக்கிய விவகாரங்களில் அவர் குரல் கொடுத்து வருவதாகவும், மற்ற உறுப்பினர்களை விட தனித்துவமாக செயல்பட்டு, மக்களின் பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டு வருவதில் சௌமியா ஆர்வமாக இருப்பதாகவும் அன்புமணி சுட்டிக்காட்டியிருந்தார்.

மதுவிலக்கை அமல்படுத்த விவாதம்

இந்நிலையில் இன்றும் சௌமியா அன்புமணியின் பேச்சுக்கு பாராட்டு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி இன்று ஆற்றிய ஆக்கப்பூர்வமான உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மதுவிலக்கு குறித்தான விவாதத்தின் போது பேசிய சௌமியா அன்புமணி, டாஸ்மாக் மதுபான விற்பனை சாதாரண குடும்பங்களின் பொருளாதாரத்தையும் பெண்களின் சுதந்திரத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது..

குறிப்பாக, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பல நூறு கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் குழந்தைகளின் கல்வி, மகள்களின் திருமணம் மற்றும் வீடு கட்டுதல் போன்ற அவசியமான தேவைகளுக்காகச் சேமிக்கப்பட வேண்டிய பணம் மதுவிற்காக வீணடிக்கப்படுகிறது.. எனவே அரசு குறைந்தபட்சம் மதுவிலக்கை ஒரு கொள்கையாகவாவது அறிவிக்க வேண்டும்

மதுவிலக்குக்காக பாமக மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் மூலம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.. தவெக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 717 மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது மிகப்பெரிய சாதனை" என்றார்.

துணை சபாநாயகர் பாராட்டு

சௌமியா அன்புமணியின் இந்த கருத்துகளுக்கு பதிலளித்துப் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், அவையின் மாண்பைக் காக்கும் வகையிலும், மிகச்சிறப்பான முறையில் தரமான தரவுகளுடன் ஆக்கப்பூர்வமாகப் பேசுவதைக் சுட்டிக்காட்டி சௌமியா அன்புமணியை வெகுவாகப் பாராட்டினார்.

"சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்... சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக பேசுகிறார்.

கடந்த கால அரசுகள் மதுவிலக்கு கோரிக்கைகள் மீது தயக்கம் காட்டிய நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அது தவெக அரசால்தான் சாத்தியமாகும்" என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். இந்த சௌமியா அன்புமணியை, துணை சபாநாயகர் பாராட்டிய இந்நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+