சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு! அமைச்சர் கே.என்.நேருவிடமும் விசாரணை!
சென்னை : அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவே தான் கூறியதாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட திமுக முக்கிய பிரமுகரும், கழக தலைமை நிலைய செயலரும் , தற்போதைய நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியான தொழிலதிபர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

ராமஜெயம் கொலை வழக்கு
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் வழக்கு குறித்த தகவல்களை எஸ்பி ஜெயக்குமார் பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னதாக குற்றவாளிகள் குறித்த தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படுமென அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்பி ஜெயக்குமார்
இதனிடையே செய்தியாளர்களிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள ஜெயக்குமார், விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்று தான் நீதிமன்றத்தில் கூறினோம். குற்றவாளிகளை நெருங்குகிறோம் என்று நாங்கள் கூறவில்லை. 48 பேர் கொண்ட எங்களது குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது 100% கொலையாளியை கண்டுபிடித்து முன் நிறுத்துவோம்.

விசாரணை தீவிரம்
ஆனால் பல்வேறு கோணங்களில் விசாரணை முழுமையாக நடத்தி வருகிறோம். ஏற்கனவே, இந்த வழக்கை விசாரனை செய்த உயர் 6உயர் அதிகாரிகள் உட்பட 198 நபர்களை விசாரித்துள்ளோம். ராமஜெயம் மனைவி அமைச்சர் கே.என் நேரு வரை அனைவரையும் விசாரித்து உள்ளோம். இரண்டு முறை கே.என் நேருவை சந்தித்து விசாரணை நடத்தினேன் என தெரிவித்தார்.

அதிகாரிகளிடமும் விசாரணை
மேலும் ராமஜெயம் கொலைவழக்கு தொடர்பாக 198 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் காவல் ஆய்வாளர், உதவி ஆணையர் உள்ளிட்ட 6 பேர் அடங்குவர். ராமஜெயத்தின் மகன் வினித், உறவினர் வினோத் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications