கலகமா பண்றீங்க.. ஆவேசமான அப்பாவு.. எடப்பாடி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவு
சென்னை: சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அனைவரையும் குண்டு கட்டாக வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதிமுக எம்எல்ஏக்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என்றும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கி உடனே அனல் பறந்தது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்கள் அமளி துமளியில் ஈடுபட்டனர்.
ஆர்.பி உதயகுமாரை எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் நியமித்தது குறித்து முடிவெடுத்து அறிவிக்குமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு அனைவரையும் இருக்கையில் அமருமாறு கூறினார்.
அதனை ஏற்காத அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்றைக்கு இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் வருகிறது எனவே அதை ஆதரிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு ஆதரவாக கலகம் எழுப்புகிறீர்கள்.
திட்டமிட்டு சபைக்கு வந்து கலகம் செய்கிறீர்கள். அதற்கு நான் விடமாட்டேன் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, அமளியில் ஈடுபட்ட அனைவரையும் சபாநாயகர் அப்பாவுவை அவையை விட்டு வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து அனைவரும் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபை வளாகத்திலும் சத்தம் கேட்கிறது அனைவரையும் வெளியேற்றுங்கள் என்று சொன்னார் சபாநாயகர் அப்பாவு. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அவரது தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications