விட்டாச்சு லீவு..10,11,12 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது..கல்வி அதிகாரிகள் உத்தரவு
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 1முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. விடுமுறை நாட்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றது.

தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஜனவரி 5 ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும். இதர வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஜனவரி 2 ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களைக் குறித்த முக்கிய அறிவிப்பைப் பள்ளி கல்வித் துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு விடுத்துள்ளனர்.
1 முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும் 2023-ம் ஆண்டில் ஜனவரி 5 ஆம் நாள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இன்று முதல் தொடங்கும் விடுமுறை வழக்கமாக 9 நாட்கள் இருக்கும். அதே போல் இந்த ஆண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை விடுத்துள்ளனர்.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதர வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2 ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் மற்றும் சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் வலியுறுத்தின. இதையடுத்து விடுமுறை நாட்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், ஆடியோ மூலமாக இந்த செய்தியை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
அரையாண்டு விடுமுறை தருணத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளும் நடைபெறக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதிய வருடப் பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பிற்குப் பதில் பொதுத்தேர்வு எதிர்கொள்ள இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அசைன்மென்ட்களை மட்டும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications