இந்து விழாவில் முஸ்லிம், கிறிஸ்தவர்களை கூப்டுங்க! பலருக்கு மத நம்பிக்கையில்ல - ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு
சென்னை: இந்து விழாக்களில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஜோஹோ தொழில்நுட்ப நிறுவன சி.இ.ஓ-மான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு ஜோஹோ என்ற உலக புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை உட்பட உலகின் பல இடங்களில் இவரது ஜோஹோ நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உலகம் முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர். ஜோஹோ நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்கள் பல்வேறு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் ஸ்ரீதர் வேம்பு
அந்த வகையில் சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்ப குழுமமாக வளர்ந்து நிற்கிறது ஜோஹோ. கொரோனா ஊரடங்கு சமயத்தில் பல நிறுவனங்கள் மூடப்பட்ட வீட்டிலிருந்தே பலரும் பணி செய்ய தொடங்கியபோது ஸ்ரீதர் வேம்புவும் தமிழ்நாட்டிற்கு வந்து கிராமத்தில் இருந்து தனது நிறுவனத்தை இயக்கத் தொடங்கினார்.

ஆர்.எஸ்.எஸ். அனுதாபி
இதுபோன்ற இயற்கை சூழலுக்கு மத்தியில் பணிபுரிவது அருமையாக இருப்பதாகவும் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதற்காக இவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இவர் ஆர்.எஸ்.எஸ். அபிமானி என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. ஸ்ரீதர் வேம்பு ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். பல்வேறு விசயங்கள் தொடர்பாக அவர் அதில் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

முஸ்லிம், கிறிஸ்தவர்
அந்த வகையில்தான் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், "நாம் இந்து விழாக்களுக்கு இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழைக்க வேண்டும் என்று நம்புகிறேன். அது மதம் சார்ந்த விழாவாக இருந்தாலும் சரி. இந்துக்கள் மத்தியில் மத நம்பிக்கையின் அளவு வேறுபடுகிறது. (ஒவ்வொரு குடும்பத்திலும் கடவுள் மறுப்பாளர் இருக்கிறார். இது முரணானது கிடையாது) எனவே அனைவரையும் வரவேற்போம்.

மத நம்பிக்கை
விழாக்களில் அனைவரும் மரியாதை நிமித்தமாக கலந்துகொள்ள வேண்டுமே தவிர, விழாவிலும் பங்கேற்கும் ஒவ்வொருவரும் முழு மத நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முழு மதநம்பிக்கையை அளவுகோளாக வைத்தால் என்னுடைய இளமைகாலம் உட்பட பல இந்துக்கள் அந்த தகுதியை இழந்துவிடுவார்கள்." என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications