போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் இழுபறி நீடிப்பு- இன்றும் பேச்சுவார்த்தை!
சென்னை : அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடைபெற்ற 7ம் கட்ட பேச்சுவார்த்தையில், ஊதிய ஒப்பந்த காலத்தை 4 ஆண்டாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து, இன்று மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு தொடர்பான ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இதுவரையில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தம் போடுவது தொடர்பான பேச்சுவார்த்தை தள்ளிப்போனது. இதனால், கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய 14-வது ஊதிய ஒப்பந்தம், தற்போது வரை இறுதி செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான 14- ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால், நிதித்துறை இணை செயலாளர் அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், தொமுச பேரவை பொதுச்செயலாளா் எம்.சண்முகம், தொமுச நிா்வாகி கி.நடராஜன், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளா் ஆா்.கமலக்கண்ணன், தலைவா் தாடி ம.ராசு, சிஐடியு தலைவா் அ.சவுந்தரராசன் உள்ளிட்ட 66 தொழிற் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனர். காலையில் தொடங்கிய பேச்சுவாா்த்தை மாலை 6 மணி வரை நீடித்தது.
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததாலும் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.
ஏற்கெனவே உள்ளபடி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்னும் நடைமுறையை மாற்றக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்றும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications