சாதனை வாக்குப்பதிவு.. மே 4 தமிழ்நாடு வெல்லும்.. தேர்தல் முடிந்ததுமே முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை
சென்னை: "ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்!" என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த நிலையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சட்டசபை தேர்தலில் சுமார் 4.87 கோடி தமிழக மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் முதல் முறையாக 85.10% வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாதனை வாக்குப்பதிவு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!
🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.
🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.
🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
🗳️ தமிழ்நாடு வாக்களித்து விட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தமாக 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications