சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆக்சிஜனை முழுவதும் மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது - தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜனில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே மருத்துவத்திற்கு பயன்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் பெரும்பாலும் தாமிர உற்பத்திக்கு தான் பயன்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜனில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே மருத்துவத்திற்கு பயன்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் தினசரியும் மூன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 30 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் 30 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

Sterlite oxygen only 35 metric tons is used for medicine says TN government

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, ஆலையை ஏன் அரசே ஏற்று நடத்தக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். .

ஆலையை திறக்க உத்தரவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வதாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசியல் கட்சிகள் ஒப்புதல் அளித்ததால், 4 மாதத்திற்கு தற்காலிகமாக ஆலையை திறக்க முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார். ஆக்சிஜன் பயன்பாட்டிற்கு மட்டுமே ஆலை திறக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் திரவ ஆக்சிஜனை மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மருத்துவத்திற்கு பயன்படுத்தும் ஆக்சிஜனை தயாரிக்க வேதாந்தாவுக்கு சிறிய அளவிலேயே திறன் உள்ளதாகவும் கூறினார்.

ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் பெரும்பாலும் தாமிர உற்பத்திக்கு தான் பயன்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், உற்பத்தியாகும் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜனில் வெறும் 35 மெட்ரிக் டன் ஆக்சின் மட்டுமே மருத்துவத்திற்கு பயன்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

English summary
The oxygen produced in Sterlite is mostly used for copper production, the public prosecutor said in the Chennai High Court. He also said that out of 1050 metric tons of oxygen, only 35 metric tons of oxygen is used for medicine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X