IPC 304A.. பிரியா மரணம் மருத்துவ அறிக்கையை தொடர்ந்து கடுமையாக்கப்பட்ட வழக்கு பிரிவு- போலீஸ் ஆக்ஷன்!
சென்னை : மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குப் பிரிவை அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.
கால்பந்து வீராங்கனையும், கல்லூர் மாணவியுமான பிரியா, கால் வலியால் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், அவர் மரணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரியா உயிரிழப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மாணவி மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என மருத்துவக் குழு அறிக்கை அளித்திருப்பதால், வழக்குப் பிரிவை போலீசார் மாற்றியுள்ளனர்.

கால்பந்து வீராங்கனை மரணம்
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியா, கால் வலியால் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை அளித்தும், வலி அதிகரித்ததால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரியாவின் கால் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தீவிர விசாரணை
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் மருத்துவர்களின் அலட்சியமே பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவக் குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அலட்சியமே காரணம்
பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மாணவி பிரியா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவக் குழுவின் அறிக்கை நேற்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவருடைய கால் அகற்றப்பட்டு பின்னர் அவர் உயிரிழந்ததற்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக் குறைவே காரணம் என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்குப் பிரிவு மாற்றம்
இந்த வழக்கில் தொடர்புடைய மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் மற்றும் சிலர் மீது ஏற்கனவே 174 என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை கடுமையாக்கியுள்ளது. சந்தேக மாரணம் என்ற பிரிவிலிருந்து கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் (IPC 304A) என்ற பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை
இரு மருத்துவர்களும் தலைமறைவாக இருப்பதால், அவர்களது வீடுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. போலீசாரின் சம்மனுக்கு அவர்கள் ஆஜராகவில்லை என்றால் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட வல்லுநர்களிடம் முறையான ஆலோசனை பெற்று மருத்துவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் மனு
இந்நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இரண்டு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளதாகவும், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இன்று விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் இருவரும் மனுவில் உறுதி அளித்துள்ளனர். இந்த மனு இன்று நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications