பள்ளியை சுத்தப்படுத்த மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை
சென்னை: பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது. பள்ளிகளை தூய்மைபடுத்த 100 நாட்கள் வேலைத்திட்ட பணியாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வாரத்தில் வியாழக்கிழமைதோறும் காலையில் பள்ளி வளாகத்தை, வகுப்பு ஆசிரியர்கள் தலைமையில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மூலம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும்

மாணவர் தூய்மைப் பணியை புகைப்படம் எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளி வளாகத் தூய்மை குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் திடீரென சோதனையிடலாம். அப்போது, தூய்மையின்றி உள்ள பள்ளிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும்.
எனவே, அனைத்துப் பள்ளிகளும் தூய்மையை தொடர்ந்து பராமரிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பள்ளிகள் மட்டுமின்றி, தாம் வசிக்கும் இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சில பள்ளிகளில் மாணவர்கள் கழிவறையை தூய்மை செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. மாணவிகள் தண்ணீர் பிடித்து வகுப்பறைக்குள் கொண்டு சென்று வைக்கும் வீடியோக்களும் வெளியானது. பலரும் இந்த வீடியோக்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது. பள்ளிகளை தூய்மைபடுத்த 100 நாட்கள் வேலைத்திட்ட பணியாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications