அடுத்தடுத்து பாயும் வழக்குகள்.. 3-வது வழக்கில் மீரா மிதுன் கைது: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்!
சென்னை: துணை நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவருமான மீரா மிதுன், பட்டியலினத்தவர்கள் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசினார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பலர் போலீசில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த மீரா மிதுன் கேரளாவுக்கு தப்பி ஓடினார்.

மீரா மிதுன் கைது
அங்கு இருந்தபடி ''தன்னை யாரும் கைது செய்ய முடியாது'' என அவர் பேசி போலீசாருக்கு தொடர்ந்து சவால் விடுத்து வந்தார். இதனை தொடர்ந்து போலீசுக்கு சவால் விட்ட மீரா மிதுனை கேரளாவில் வைத்து கடந்த 14-ம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது நண்பர் சாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்தனர்.

கதறி அழுதார்
இதனை தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 'வாய் தவறி பேசி விட்டேன்'' என்று பின்னர் கதறி அழுதார் மீரா மிதுன். இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்து இருந்த மீரா மிதுன் ''சினிமாவில் நடிக்க நிறைய கால் ஷீட் கொடுத்துள்ளேன். அதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மீரா கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்ற ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது.

மீண்டும் கைது
இதற்கிடையே மீராமீரா மிதுனை மீண்டும் போலீசார் கைது செய்தனர். மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இந்த புகாரை கொடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

மூன்றாவது வழக்கு
இதற்கிடையே ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த வழக்கில் மீரா மிதுனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஏற்கெனவே எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ள்ளார். அதற்கான ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் ஜாமீன் பெற்றிருந்தாலும் மீரா மிதுனால் வெளியே வர முடியவில்லை. இதற்கிடையே மேலும் ஒரு வழக்கில் மீரா மிதுன் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
Recommended Video

ஹோட்டல் நிர்வாகம்
ஜோ மைக்கல் பிரவீன் புகாரின்பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூரில் உள்ள நடசத்திர விடுதியில் மீரா மிதுன் பிரஸ் மீட் வைத்தார். அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் காவல்துறையை கடுமையாக விமர்சித்தபோது, பிரஸ் மீட் நடத்த வேண்டாம் என்று ஹோட்டல் நிர்வாகம் மீரா மிதுனிடம் கூறியது. இதனால் ஆத்திரம் அடைந்த மீரா மிதுன் ஹோட்டல் மேலாளரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஹோட்டல் மேலாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்
இந்த மூன்றாவது வழக்கு தொடர்பாக போலீசார் மீரா மிதுனை கைது செய்தனர். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மூன்றாவது வழக்கு தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டாவது வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications