குழந்தைகள் கண்டுபிடிப்பு அமைச்சகம் ஒன்று உருவாக்குங்க விஜய் சார்! அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு சூழல், பொதுமக்களை மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்தின் பெற்றோர்களையும் சொல்லொணாத் துயரத்திலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. கொலைகள், பட்டப்பகலில் பட்டாக் கத்தித் தாக்குதல்கள், வணிக நிறுவனங்களுக்குள் புகுந்து கொள்ளையடிப்பது என ஒருபுறம் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அதைவிடக் கொடூரமாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மாயமாகும் சம்பவங்கள் மாநிலத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.

வீட்டு வாசலில் விளையாடும் சிறுமிகள், தூங்கிக் கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள், டியூஷனுக்குச் செல்லும் மாணவர்கள் என யார் எப்போது காணாமல் போவார்கள் என்றே தெரியாத அளவிற்கு ஒருவித பயங்கரமான சூழல் நிலவுகிறது. "இந்த ஆட்சியில் மாயமாகும் குழந்தைகளைக் கண்டுபிடிக்கவே தனியாக ஒரு 'காணாமல் போன குழந்தைகளை மீட்கும் திட்டம்' மற்றும் ஒரு தனி அமைச்சரையே நியமிக்க வேண்டிய நிலை வந்துவிடுமோ?" என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கசப்புடன் கேள்வி எழுப்பும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

vijay tvk

செஞ்சி முதல் ராணிப்பேட்டை வரை: விடை தெரியாத மர்மங்கள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் மாயமான சம்பவங்கள் வெறும் எண்களாகக் கடந்து போக முடியாத அளவிற்கு இதயத்தைப் பதற வைக்கின்றன:

1. செஞ்சி 6 வயது சிறுமி மாயம்: பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சொந்த வீட்டிலேயே பெற்றோருடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி நள்ளிரவில் மாயமானார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், பல தனிப்படைகள், மோப்ப நாய்கள் கொண்டு தேடியும், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டும் இதுவரை சிறுமிக்கு என்ன ஆனது என்ற தகவல் இல்லை.

2. ராணிப்பேட்டை சாலையோரக் குழந்தை: சாலையோரத்தில் தங்கி பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து வாழ்ந்து வந்த எளிய நாடோடித் தம்பதியின் ஒரு வயது பச்சிளம் குழந்தை நடு இரவில் மர்மக் கும்பலால் கடத்தப்பட்டது. வாரங்கள் கடந்தும் அந்தக் குழந்தை மீட்கப்படாமல் இருந்த்து 1 மாதத்திற்கு பின்பே ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

3. ஊத்தங்கரை பள்ளி மாணவன்: டியூஷனுக்குச் செல்ல அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் ஏறிய 12 வயது சிறுவன் மாயமான வழக்கு நீண்ட சிரமத்திற்கு பின்பே கண்டுபிடிக்கப்பட்டார்.

4. பெரம்பலூர் மாணவிகள் மாயம்: பள்ளிக்குச் சென்ற இரண்டு 10-ஆம் வகுப்பு மாணவிகள் வீடு திரும்பாமல் போன சம்பவம் கிராமப்புற மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

குழந்தை கடத்தல் கும்பல்கள் சுதந்திரமாக உலவுகின்றனவா?

குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போவது தற்செயலான ஒன்று அல்ல.. மாநிலம் தழுவிய அளவில் குழந்தை கடத்தல் மாஃபியாக்களும், சமூக விரோதக் கும்பல்களும் சர்வ சாதாரணமாக இயங்கி வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.

மாநிலத்தின் எல்லைப் பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும், உளவுத்துறையின் களத் தகவல் சேகரிப்பு முற்றிலும் செயலிழந்து கிடப்பதும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்து விடுகிறது. குழந்தைகள் காணாமல் போகும்போது தொடக்கத்திலேயே விரைந்து செயல்படாமல், வழக்கமான புகாராகப் பதிவு செய்து காலதாமதம் செய்வதே குழந்தைகள் பிற மாநிலங்களுக்கோ அல்லது தவறான நபர்களின் கைகளுக்கோ கொண்டு செல்லப்படக் காரணமாகிறது.

'விளம்பர அரசியல்' விட்டுவிட்டு மீட்புப் பணிகளில் இறங்குவது எப்போது?

ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்குப் பலமான சான்று, அங்குள்ள பெண் குழந்தைகளும் சிறுவர்களும் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக வீட்டை விட்டு வெளியே சென்று பாதுகாப்புடன் வீடு திரும்புவதுதான். ஆனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பாதுகாப்பும் குழந்தைகளின் பாதுகாப்பும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

உள்துறை மற்றும் காவல் துறையைத் தன் வசம் வைத்துள்ள முதல்வர் விஜய், உடனடியாக டிஜிபி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு போர்க்கால ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும். "காணாமல் போன ஒவ்வொரு குழந்தையையும் 48 மணி நேரத்திற்குள் மீட்க வேண்டும்" என்ற தெளிவான காலக்கெடுவை நிர்ணயித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அரசுத் தரப்பில் அத்தகைய அழுத்தமான முன்னெடுப்புகள் ஏதும் இல்லாமல் வெறும் அறிக்கைகளோடு கடந்து போவது பெற்றோரின் வேதனையை இரட்டிப்பாக்கியுள்ளது.

அரசுக்கு உடனடி எச்சரிக்கை

குழந்தைகளின் கண்ணீரும் பெற்றோரின் கதறலும் ஓர் ஆட்சிக்கு ஒருபோதும் நற்பெயரை ஈட்டித் தராது. வெறும் கண்துடைப்பு விசாரணைகளைத் தவிர்த்து, மாயமான குழந்தைகள் அனைவரையும் உடனடியாகக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி வளாகங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தீவிரக் கண்காணிப்பை ஏற்படுத்தி, குழந்தை கடத்தல் கும்பல்களின் வேரையே அறுத்தெறியும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஆளும் தவெக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+