Retro OTT Release: வீக் எண்டை கொண்டாட ரெடியா? வீட்டுக்கே வரும் சூர்யா? ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் எப்போது?
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்த ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் தொடங்கி தற்போது ரெட்ரோ வரை அவரது திரைப் பயணம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சூறரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட வித்தியாசமான கதை களங்களை கொண்ட திரைப்படங்களை ஓடிடியில் வெற்றிகரமாக தந்து இருந்தார்.
ஆனாலும் நேரடியாக திரையில் வெளியான அவரது படங்கள் மிகக் கடுமையாக சொதப்பின. கடைசியாக அவர் நடிப்பில் தியேட்டர்களில் வெளியான சிங்கம் படத்தை தவிர அஞ்சான், என்ஜிகே, எதற்கும் துணிந்தவன் என பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

கடைசியாக வெளியான கங்குவா படமும் பலத்த விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் தனக்கென ஒரு வெற்றி தேவைப்பட்ட நிலையில், பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைகிறார் என்ற தகவலே கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் நாயகியாக பூஜா ஹெக்டே, ஜோஜூ, ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்தன. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான கனிமா பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கடந்த மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. படம் நன்றாக இருக்கிறது என ஒரு தரப்பும் மொக்கையாக இருக்கிறது என மற்றொரு தரப்பும் கூறி வந்தன.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் முதல் நான்கு நாட்களிலேயே 80 கோடி ரூபாயை தாண்டியது. சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக பட நிறுவனம் கூறியது. இந்த நிலையில் படம் பிளாப் தான் என ஒரு தரப்பும், வெற்றிகரமான படம் என மற்றொரு தரப்பும் கூறிவந்தது. இது ஒரு புறம் இருக்க படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
Anbu makkaley… The One… is… coming! 🔥😎
— Netflix India South (@Netflix_INSouth) May 26, 2025
Watch Retro, out 31 May, on Netflix in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam. #RetroOnNetflix pic.twitter.com/66zDCSE38S
இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் 31ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகும் என netflix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications