"ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே பள்ளம்” சுட்டிகாட்டிய நிருபர்கள்! ககன்தீப் சிங் சொன்ன 'ஸ்டன்னிங்' பதில்
சென்னை: பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, எந்த சிஸ்டமும் சரியில்லை என்று பதிலளித்து உள்ளார்.
வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு செய்யப்படாததால் நீண்டு கொண்டிருக்கும் கட்டுமான கம்பிகளுடன் ஆபத்தான பள்ளங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

விபத்து
சென்னை ஜாஃபர் கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் பணி முடித்துவிட்டு அந்த வழியாக வீடு திரும்பி இருக்கிறார்.

விபத்தில் மரணம்
அவ்வழியாக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் முத்துக்கிருஷ்ணன் தவறி விழுந்தார். அதில் நீட்டிக்கொண்டு இருந்த கட்டுமான கம்பிகள் முத்துகிருஷ்ணனின் உடலை துளைத்தன. படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாநகராட்சி ஆணையர்
இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு சென்ற செய்தியாளர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே மழைநீர் வடிகால் பள்ளம் மூடப்படாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டு இருப்பது பற்றி கேள்வி எழுப்பினார்கள்.

சிஸ்டம் சரியில்லை
இதற்கு பதிலளித்த ககன்தீப் சிங் பேடி, "எந்த சிஸ்டமும் சரியில்லை தம்பி. நிலா கூட சரியாக இல்லை. மக்கள்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மழைநீர் வழிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் கண்டிப்பாக தடுப்புகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தடுப்புகளில் பாதுகாப்பு குறைவாக இருந்தால் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்." என்றார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications