லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சுக்கு செல்லும் அருமை மாப்பிள்ளை.. அன்பிலை கலாய்த்த டிஆர்பி ராஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சுக்கு செல்லும் அருமை மாப்பிள்ளை அன்பில் மகேஷுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என டிஆர் பாலுவின் மகனும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா கலாய்த்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெற்றது. இன்று தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். இந்த நிலையில் ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் நேற்றைய தினம் வெளியானது.

எம்சிஏ பட்டதாரி

எம்சிஏ பட்டதாரி

இதில் 15 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவருக்கு பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்சிஏ பட்டதாரியான இவருக்கு இந்த துறை ஒதுக்கீடு என்பது சிறப்பானது என்கிறார்கள்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

மேலும் அன்பில் மகேஷ் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். எனவே சவால்கள் நிறைய பொறுப்பானாலும் அதிலிருந்து எதிர்நீச்சல் போட்டு கட்சிக்கும் ஆட்சிக்கும் நற்பெயரை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பமாகும்.

வாழ்த்து

வாழ்த்து

85,950 வாக்குகள் பெற்று திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாகியுள்ள அன்பில் மகேஷுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளதற்கு அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அப்படி சக எம்எல்ஏவும் நண்பருமான டிஆர்பி ராஜா தனது வாழ்த்து செய்தியில் கலாய்த்துள்ளார்.

கலாய்த்த ராஜா

இதுகுறித்து டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சிக்கு போகும் அருமை மாப்பிள்ளை @Anbil_Mahesh அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! லாஸ்ட் பென்ச்சில் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவருடையது என்றார் ராஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+