செம பிளான்.. தோனிக்கு பிசிசிஐ தந்த ஃப்ரீ ஹேண்ட்.. "அந்த" வீரரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகும் தல!
சென்னை: இந்திய டி 20 உலகக் கோப்பை தொடரில் முக்கியமான வீரர் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் பொறுப்பு தோனிக்கு வழங்கப்பட்டு இருக்கிறதாம். அதேபோல் தமிழ்நாடு வீரர் ஒருவரின் வாய்ப்பு குறித்தும் தோனி முடிவு எடுக்க உள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே அணி இன்று முக்கியமான ப்ளே ஆப் போட்டியில் ஆட உள்ளது. டெல்லி அணியை தோனி தலைமையிலான சிஎஸ்கே எதிர்கொள்ள இருக்கிறது. ஒரு பக்கம் ப்ளே ஆப் போட்டிகள் நடந்து வரும் நிலையில் உலகக் கோப்பை டி 20 போட்டிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது.
உலகக் கோப்பை டி 20 போட்டிகள் இந்த முறை அமீரகத்தில் நடக்க உள்ளது. இதில் ஆடும் இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டது.

இந்திய அணி
இந்தியாவின் டி 20 உலகக் கோப்பை தொடர் ஆலோசகராக தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளருக்கு இருக்கும் அனைத்து பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களோடு இவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆடும் 11 பேர் வீரர்களை தேர்வு செய்வது, ஆட்டத்தின் திட்டங்களை முடிவு செய்வது உள்ளிட்ட எல்லா அதிகாரமும் தோனிக்கும் உள்ளது.

பார்மிற்கு திரும்பினர்
இந்த நிலையில்தான் இந்திய டி 20 உலகக் கோப்பை தொடரில் முக்கியமான வீரர் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் பொறுப்பு தோனிக்கு வழங்கப்பட்டு இருக்கிறதாம். இந்த தொடருக்கு முன்பாக சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷான் போன்றவர்கள் சரியான பார்மில் இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் அவர்களை தேர்வு செய்தது சரியா என்றும் கூட கேள்வி எழுந்தது. ஆனால் இரண்டு பேருமே கடந்த போட்டிகளில் பார்மிற்கு திரும்பி நம்பிக்கை அளித்துள்ளனர்.

ஹர்திக் ஆட்டம் சரியில்லை
ஆனால் ஹர்திக் பாண்டியா இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. ஹர்திக் பாண்டியா இன்னும் பவுலிங் வீச தொடங்கவில்லை. இவர் பவுலிங் ஆல் ரவுண்டர் என்ற ஒரே காரணத்திற்காகவே அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் தொடர் முழுக்க இவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பவுலிங்கும் போடவில்லை. இதனால் இந்திய அணியில் இவரை எடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோனி இருக்க வேண்டும்
இவர் இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெறுவாரா என்ற முடிவை தோனி எடுக்க உள்ளார். பிசிசிஐ இதற்கான அதிகாரத்தை தோனிக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஹர்திக் பாண்டியாவை களமிறக்கலாமா அல்லது வேறு ஒரு பவுலிங் ஆல் ரவுண்டருக்கு இடம் கொடுக்கலாமா என்ற முடிவை தோனி எடுக்க உள்ளார். தோனி இது தொடர்பாக கோலி, ரோஹித், ரவி சாஸ்திரி ஆகியோருடன் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ ஆலோசனை
இவர்கள் ஒன்றாக மீட்டிங் நடத்தி ஹர்திக் பாண்டியா குறித்த முடிவை எடுக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் கலந்து கொள்ளும் மீட்டிங் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவின் ஐபிஎல் ஆட்டம் காரணமாக பிசிசிஐ அவர் மீது கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த மீட்டிங் நடக்கிறது.

காயம்
ஐந்தாவது பவுலர் இல்லாமல் செல்லும் ரிஸ்க்கை பிசிசிஐ தேவையின்றி எடுக்காது என்பதால் ஹர்திக் பாண்டியா பிரச்சனை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இன்னொரு பக்கம் வருண் சக்ரவர்த்தி காயம் குறித்தும் இந்த மீட்டிங்கில் முடிவு செய்யப்பட உள்ளது. வருண் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இப்போது அவர் ஆட கூடிய சூழ்நிலையில் இருக்கும்.

பார்த்துக்கொள்ளலாம்
ஆனால் தொடரின் போது காயம் பெரிதானால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும். கொரோனா என்பதால் அப்போது புதிய வீரரை தேடிக்கொண்டு இருக்க முடியாது. இதனால் சாஹல் ஒன்றை ஸ்டான்ட் பை வீரர்களை உள்ளே கொண்டு வருவது குறித்தும் தோனி நடத்த போகும் இந்த மீட்டிங்கில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications