தாம்பரம் பூங்கொடிக்கு தில்லு பாருங்க.. ஜெய்சங்கர், தாமோதரன், ரமேஷ்.. கிறுகிறுத்து போன சென்னை போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் ஆலப்பாக்கத்தில் வீட்டின் வாசலில் ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்தார்.. மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டாராம்.. உடம்பெல்லாம் காயங்கள் அதிகமாக இருந்தன.. ஆனால் அதைவிட அதிகமாக தலையில் காயங்கள் கிடந்தன.. இதுதான் போலீசாருக்கு சந்தேகத்தை தந்து விட்டது..

ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ்.. 47 வயதாகிறது.. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.. இவரது பெயர் பூங்கொடி.. 45 வயதாகிறது.. இந்நிலையில்தான், பூங்கொடி வீட்டு வாசலில் ஒரு சடலம் கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை தந்துவிட்டது.

Chennai Tambaram Poongodi

சென்னை தாம்பரம் ஆலப்பாக்கம்

எனவே, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை போலீசார் பூங்கொடியிடம் விசாரணை நடத்தினார்கள்.. முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் பூங்கொடியின் மாஸ்டர் பிளான் தெரியவந்தது.

அதாவது சில வருடங்களுக்கு முன்பு ரமேஷூக்கு விபத்து ஏற்படடு, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு விட்டது. அதனால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

ராயபுரம் கார் டிரைவர்

இந்த நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ராயபுரத்தை சேர்ந்த கார் டிரைவரான 33 வயது தாமோதரன், சவாரிக்காக ரமேஷின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பூங்கொடியின் செல்போன் நம்பரை பெற்ற தாமோதரன், அவருடன் தொடர்ந்து பேசி பழகியதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக தெரிகிறது. 2 பேரும் அடிக்கடி வெளியில் செல்வதும், தாமோதரன் பூங்கொடியின் வீட்டுக்கு வருவதுமாக இருந்துள்ளனர்.

இதனிடையே, அதாவது சுமார் 9 மாதங்களுக்கு முன்பு பூங்கொடியின் வீட்டில் இருந்த இரும்பு கேட் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்வதற்காக தாமோதரன் மூலம் தாம்பரத்தை சேர்ந்த 38 வயது வெல்டர் ஜெய்சங்கர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். வேலை முடித்து சென்ற ஜெய்சங்கரும் பூங்கொடியின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டு அவருடன் பேசி பழகியதாக கூறப்படுகிறது.

தகாத உறவு

கடந்த 4 மாதங்களாக இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், அவர்களுக்கிடையேயும் தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால், கடந்த 10 நாட்களாக ஜெய்சங்கர் செல்போனில் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால், அவரது நம்பரை பூங்கொடி பிளாக் செய்து விட்டார்.. ஆனால் அதன்பிறகும் அவர் நேரடியாக வீட்டுக்கு வந்து பூங்கொடியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி, தனது முதல் காதலனான தாமோதரனுக்கு போனை போட்டு வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.. ஜெய்சங்கரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று தாமோதரனிடம் சொல்லி உள்ளார்.. உடனே தாமோதரனும் இதற்கு ஒப்புக்கொண்டார்..

ஜெய்சங்கர் பூங்கொடி

சம்பவத்தன்று, ஜெய்சங்கர் பூங்கொடி வீட்டிற்குள் வந்துள்ளார். .அப்போது இரும்புக் கம்பியை எடுத்து, தாமோதரனும், பூங்கொடியும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். இதில் படுகாயமடைந்த ஜெய்சங்கர் மயங்கி விழுந்தார். பிறகு அவரை வீட்டின் வாசலில் இழுத்து போட்டுவிட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்ததாக இருவரும் நாடமாடியிருக்கிறார்கள்..

இதையெல்லாம் வாக்குமூலமாக பூங்கொடி சொல்லி உள்ளார்.. உயிருக்கு போராடிய ஜெய்சங்கரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. முதலுதவிக்குப் பிறகு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாஸ்டர் பிளான்

கடந்த சில நாட்களாக ஜெய்சங்கர் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்ததால் இந்த முடிவை எடுத்ததாக பூங்கொடி வாக்குமூலம் அளித்துள்ளார்.. இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்..

கணவர் இருக்கும்போதே, முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து , 2வது கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்றதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+