சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாத்துக்கும் சண்டை போட வேண்டியதாயிருக்கு.. தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்ப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் தொல்லியல்துறை கீழ் இயங்கும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலை படிப்பில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறைக்கு சொந்தமான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் சேருவதற்கு 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Tamil language has been included deendayal upadhyay Archaeology PG exams

அந்த அறிவிப்பில் தமிழ் மொழி இடம் பெறவில்லை. ஆனால், இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. மதுரை தொகுதி எம்பி சு. வெங்கடேசன் கடுமையாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதையடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து இருந்தார். தமிழ் மொழி சேர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

இதையடுத்து செம்மொழி அந்தஸ்து பெற்று இருக்கும் தமிழ் மொழியை தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் சேர்க்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார்.

காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பதிவு அழிப்பு.... தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!! காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பதிவு அழிப்பு.... தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

இந்நிலையில் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் உள்ளிட்ட செம்மொழிகளும் புதிய அறிவிப்பாணையில் உள்ளன. இதற்கு எம்பி சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

English summary
Tamil language has been included deendayal upadhyay Archaeology PG exams
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X