நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக வரும் கருத்து கணிப்புகள் எல்லாம் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்று கணித்துள்ளன.
தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்கள் இப்போதே நகரத் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஓட்டத்தில், 'INSIDE ELECTION', ABP news, போல் டிராக்கர் (Poll Tracker), லோக் போல் (Lok Poll) மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் ஆகிய 5 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், சசிகலா- ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என ஏபிபி சர்வே கணித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி தரும் வகையிலான இடங்களே கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாங்கும் வாக்கு சதவீதம் ஒருபுறம் ஆச்சரியப்படுத்தினாலும், மறுபுறம் அந்தக் கட்சிக்கு ஒரு கசப்பான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது.
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 'INSIDE ELECTION' நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஆளுங்கட்சியான திமுகவுக்குச் சாதகமாகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குப் பலத்த பின்னடைவாகவும் அமைந்துள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் சுமார் 1.63 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த மெகா ஆய்வின்படி, திமுக கூட்டணி 44% வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.
'INSIDE ELECTION' நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு
இதன் விளைவாக, வரும் தேர்தலில் 159 முதல் 165 தொகுதிகளைக் கைப்பற்றி திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிகிறது. மாறாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி வெறும் 33% வாக்குகளை மட்டுமே பெற்று, 64 முதல் 70 தொகுதிகளுக்குள் சுருங்கும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் மண்டலங்களில்கூட அக்கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என்ற கணிப்பு, அக்கட்சியின் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 18% வாக்குகளைத் தன்வசப்படுத்தும் தவெக, 4 முதல் 6 தொகுதிகளைக் கைப்பற்றி சட்டமன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கும் எனத் தெரிகிறது. தவெக ஈர்க்கும் இந்த 18% வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்கு வங்கியில் இருந்தே பிரியும் என்பதால்,
அது அதிமுகவுக்குப் பெரும் இழப்பாக மாறியுள்ளது. அதே சமயம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையும் தொகுதிகள் எதுவும் கிடைக்காது (0 இடங்கள்) என இந்தக் கணிப்பு கூறுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், திமுகவின் ஆதிக்கம் தொடர்வதும், அதிமுகவின் வாக்கு வங்கி சரிவைச் சந்திப்பதும், தவெக ஒரு மூன்றாவது சக்தியாக உருவெடுப்பதும் 2026 தேர்தல் களத்தின் முக்கிய மாற்றங்களாக இருக்கும் என இன்சைட் எலெக்சன் சர்வே சுட்டிக்காட்டுகிறது.
லோக் போல் கணிப்பு: திமுக வெற்றி
லோக் போல் அமைப்பின் மெகா சர்வே முடிவுகள் அறிவாலயத்தை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.
திமுக கூட்டணி: 181 முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெற்று, சுமார் 40.1% வாக்கு வங்கியைத் தக்கவைக்கும்.
தனிப்போர்: இதில் ஹைலைட் என்னவென்றால், திமுக கூட்டணி 180 இடங்களைத் தாண்டும்போது, திமுக மட்டுமே தனித்து 140 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளது. இதனால் 'ஆட்சியில் பங்கு' என்ற பேச்சுக்கே இடமில்லாமல், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை திமுக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அக்னி நியூஸ் சர்வீஸ்: திமுக வெற்றி
அக்னி நியூஸின் புள்ளிவிவரங்கள் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் யோசனையைக் கொடுத்துள்ளன.
கோட்டை வசமாகும்: மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 180 இடங்களில் முன்னிலை பெற்று அசுர பலத்தைக் காட்டும்.
மண்டல வாரியான 'கிளீன் ஸ்வீப்': - சென்னை: 37-ல் 36 இடங்கள் திமுக வசமாகும். அதிமுகவிற்கு வெறும் 1 இடம் மட்டுமே!
மத்திய மண்டலம்: 37-ல் 35 இடங்களில் திமுகவின் ஆதிக்கம்.
கொங்கு & வடக்கு: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இங்கேயும் திமுகவே முந்துகிறது. மேற்கில் 50-ல் 32 இடங்களையும், வடக்கில் 52-ல் 35 இடங்களையும் திமுக தட்டிச் செல்கிறது. இதிலும் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
போல் டிராக்கர்: 'உச்சாணிக் கொம்பில்' உதயசூரியன்!
போல் டிராக்கர் முடிவுகளும் திமுகவிற்குச் சாதகமாகவே 'பஞ்ச்' வைக்கின்றன.
வெற்றி வாகை: திமுக கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றும். 42.7% வாக்கு விகிதத்துடன் அசைக்க முடியாத சக்தியாக திமுக உருவெடுத்துள்ளது.
இது எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலான காலக்கட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று இதிலும் கூறப்பட்டு உள்ளது.
-
திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்! -
'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்! -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
“எடப்பாடி உடன் சேர்த்து வைத்தது பாஜக தான்.. எல்லாம் அமித் ஷா முயற்சியால் நடந்தது” - டிடிவி தினகரன் -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
அதிமுக 167 வேட்பாளர்கள்.. எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை? - முழு விவரம் இதோ! -
அங்க மூணாவதா ஒருத்தன் இருப்பானே.. தம்பி மூலம் செந்தில் பாலாஜி செக்..விஜய பாஸ்கருக்கு ஷாக் -
வேலூர் தொழில் அதிபர்களால் ட்விஸ்ட்.. ஜோலார்பேட்டையில் கேசி வீரமணிக்கு கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது -
கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்! -
எஃகு கோட்டையாக நிற்கும் எடப்பாடி தொகுதி.. இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்! கடந்து வந்த பாதை












Click it and Unblock the Notifications