தேதி குறிச்சாச்சி.. டிச., 20ல் கொட்டப்போகும் கனமழை.. பட்டியலில் 8 மாவட்டங்கள்..உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் மழை குறைந்துள்ளது. இந்நிலையில் தான் டிசம்பர் 20ல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு சென்னையின் காலநிலை என்ன என்பது பற்றிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் உள்ளது. கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த வாரம் வங்ககடலில் உருவான மாண்டஸ் புயல் உள்ளிட்டவற்றால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தன.
கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இல்லை. சில இடங்களில் மட்டும் கனமழை பெய்தது.

இன்று முதல் டிசம்பர் 18 வரையிலான நிலவரம்
இந்நிலையில் தான் இன்று முதல் டிசம்பர் 20ம் தேதி வரை 5 நாளுக்கான வானிலை அப்டேட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கி உள்ளது. அதன்படி கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 18 வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதகிளி்ல ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 20ல் கனமழை
டிசம்பர் 19, 20ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரகை்கால் பகுதகிளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய உள்ளது. மேலும் டிசம்பர் 20ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. அன்றைய தினம் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. மேலும் அன்றைய தினம் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.

சென்னை நிலவரம் என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 22 முதல் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திஇமல் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். தென்மேற்கு வங்ககடலில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் நாளை காலை வரை 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும். தென்மேற்கு அரபிக்கட்ல பகுதியில் நாளை காலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேக்தகதிலம் காற்று வீசும். அதன்பிறகு படிப்படியாக காற்றின் வேகம் குறையும். இதனால் மேற்கூறிய இடங்ளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தென்மண்ட வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications