ஆளுநர் தாமாக முன்வந்து வாசித்த உரையை அவைக்குறிப்பில் இடம்பெறச்செய்யக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே சட்டசபையில் இடம் பெறச்செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி வேகமாக வெளியேறினார். சட்டசபையில் முல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போதே எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Jan 09, 2023, 1:48 pm IST
ஆளுநர் மீது அப்பாவு விமர்சனம்!
Jan 09, 2023, 12:50 pm IST
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு கருத்து சொல்வதற்கு உரிமை உள்ளது - சபாநாயகர்
Jan 09, 2023, 12:49 pm IST
எனக்கு வானாளவிய அதிகாரம் இருப்பதாக நான் கூறவில்லை - சபாநாயகர் அப்பாவு.
அரசு தயாரித்த உரையை புறக்கணித்த விட்டு தானாக பேசுவது அநாகரீகம் - சபாநாயகர் அப்பாவு.
வேறு உயர்பதவிக்காக இதுபோல ஆளுநர் செயல்படுகிறாரோ என சந்தேகமாக உள்ளது - சபாநாயகர்.
ஆளுநரின் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை - சபாநாயகர்
Jan 09, 2023, 12:47 pm IST
ஆளுநரின் செயல்பாடுகள் வேதனையளிக்கும் வகையில் உள்ளது - சபாநாயகர் அப்பாவு.
அம்பேத்கர் பெயரைக்கூட ஆளுநர் உச்சரிக்காதது வேதனை - சபாநாயகர் அப்பாவு
Jan 09, 2023, 12:21 pm IST
அரசு எழுதி கொடுத்ததை வாசிக்காமல் தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
Jan 09, 2023, 12:06 pm IST
ஜனவரி 13ஆம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு.
மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு நாளை இரங்கல் தீர்மானம் வாசிப்பு.
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டசபை நாளை நாள் முழுவதும் தள்ளிவைக்கப்படும்
Jan 09, 2023, 12:05 pm IST
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் 13ஆம் தேதி வரை நடைபெறும் - அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு
Jan 09, 2023, 11:56 am IST
அரசின் உரையில் இல்லாமல் ஆளுநர் பேசிய வார்த்தைகள் குறிப்பில் இருந்து நீக்கம்.
ஆளுநர் தாமாக முன்வந்து பேசய வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானம்.
தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையை விட்டு வேகமாக வெளியேறினார்
Jan 09, 2023, 11:56 am IST
ஆளுநரின் செயலால் முதல்வர் ஸ்டாலின் வருத்தம்!
Jan 09, 2023, 11:52 am IST
ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் ஏதுமில்லை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து போயுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி
Jan 09, 2023, 11:52 am IST
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.
ஆளுநர் உரை வெற்று உரையாக மட்டுமே உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
Jan 09, 2023, 11:47 am IST
ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் பதிவேற்றக்கூடாது - முதல்வர் தீர்மானம்.
அவைக்குறிப்பில் அரசு தயாரித்து கொடுத்த உரை மட்டுமே இடம் பெறும் - முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்
Jan 09, 2023, 11:40 am IST
ஆளுநருக்கு முழு மரியாதை அளித்து கண்ணியத்துடன் நடந்து கொண்டோம் - முதல்வர் ஸ்டாலின்.
முறைப்படி சட்டசபை கூட்டம் முடியும் முன்பே அவையில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ரவி
Jan 09, 2023, 11:40 am IST
முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியதால் சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
சட்டசபையில் இருந்த போது அவரை கண்டித்து முதல்வர் பேசியதால் ஆளுநர் வெளியேறினார்
Jan 09, 2023, 11:39 am IST
‘திராவிட மாடல் வார்த்தையை தவிர்த்தது ஏன்?’
Jan 09, 2023, 11:38 am IST
ஆளுநர் உரையைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு.
அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை - முதல்வர் ஸ்டாலின்
Jan 09, 2023, 11:34 am IST
பெரியார், அண்ணா என்ற பெயர்களையும் ஆளுநர் வாசிக்கவில்லை என திமுக கூட்டணி கட்சியினர் குற்றச்சாட்டு.
அம்பேத்கர் பெயரையும் வாசிக்க ஆளுநர் தவிர்த்து விட்டார் - திமுக கூட்டணி கட்சிகள்.
தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பதை வாசிக்க ஆளுநர் தவிர்த்து விட்டார் - திமுக கூட்டணி கட்சிகள்
Jan 09, 2023, 11:21 am IST
திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளூநர் தவிர்த்தது ஏன் - செல்வ பெருந்தகை.
அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்து விட்டார் - செல்வ பெருந்தகை.
தன்னுடைய இஷ்டத்திற்கு ஆளுநர் உரை வாசித்தது வன்மையாக கண்டிக்கத் தக்கது - செல்வ பெருந்தகை
Jan 09, 2023, 11:13 am IST
கிழக்கு கடற்கரை சாலை 4 வழி சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது - ஆளுநர் உரை.
சென்னை பெருநகரின் எல்லை 5 மடங்காக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது - ஆளுநர் உரை
Jan 09, 2023, 11:09 am IST
நதிநீர் பிரச்சினையில் நம் உரிமையை பாதுகாக்க இந்த அரசு தயாராக உள்ளது - ஆளுநர் ரவி
Jan 09, 2023, 11:08 am IST
திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார்
Jan 09, 2023, 11:06 am IST
சர்வதேச அளவில் திறன் கொண்டவர்களாக இளைஞர்களை மாற்றுவதற்கு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது - ஆளுநர் உரை.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 3 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் - ஆளுநர் உரை.
தொழில் நிறுவனங்களில் பணியில் சேரும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர் - ஆளுநர் உரை.
கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - ஆளுநர் உரை
Jan 09, 2023, 11:01 am IST
நாங்கள் ஆளுநரைத்தான் புறக்கணிக்கிறோம் ஆளுநர் உரையை அல்ல - திமுக கூட்டணி கட்சியினர்.
சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்த திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பேட்டி.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் - வேல்முருகன்
Jan 09, 2023, 11:00 am IST
“நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கிறது” - ஆர்.என்.ரவி
Jan 09, 2023, 11:00 am IST
தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு போட்டி நடத்தப்படும் - ஆளுநர் உரை.
மாநிலம் முழுவதும் கபடி, கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன - ஆளுநர் உரை
Jan 09, 2023, 10:59 am IST
புயல், மழை, வெள்ளத்தை சிறப்பாக கையாண்ட தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள் - ஆளுநர் உரை
Jan 09, 2023, 10:59 am IST
தமிழ்நாட்டில் 3வது தகவல் தொழில் நுட்ப பூங்கா மதுரையில் ரூ.600 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது .
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டு தொடங்கி வைத்துள்ளார்
Jan 09, 2023, 10:57 am IST
ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆங்கில உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்
Jan 09, 2023, 10:52 am IST
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானதாக அரசு கருதுகிறது - ஆளுநர் உரை.
வாழிய செந்தமிழ்..ஜெய் ஹிந்த் என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசித்து முடித்தார்
Jan 09, 2023, 10:52 am IST
நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது - ஆளுநர் உரை.
நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.
நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது - ஆளுநர்
READ MORE
6:25 AM, 9 Jan
2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.
6:27 AM, 9 Jan
பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும்
6:28 AM, 9 Jan
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது
6:35 AM, 9 Jan
இந்த ஆண்டு 2ஆவது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றுகிறார் ஆளுநர்
6:35 AM, 9 Jan
கடந்த ஆண்டு கலைவாணர் அரங்கில் நடந்த கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
6:36 AM, 9 Jan
ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் கூட்டத் தொடரில் முதல் முறையாக பங்கேற்கிறார் தமிழ்நாடு ஆளுநர்
6:36 AM, 9 Jan
சட்டசபையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குகிறது
6:36 AM, 9 Jan
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது
6:51 AM, 9 Jan
அப்பாவு மொழிபெயர்க்கும் வரை சட்டசபையில் அமர்ந்திருப்பார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி
6:51 AM, 9 Jan
ஆங்கிலத்தில் ஆளுநர் வாசிக்கும் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு மொழிபெயர்க்கிறார்
6:51 AM, 9 Jan
2023 ஆம் ஆண்டு முதல் காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் ஆளுநர் உரை வாசிக்கப்படுகிறது
Tamil Nadu Assembly Session [தமிழக சட்டசபை கூட்டம்] 2023 LIVE News Updates in Tamil: Check out the LIVE News Updates on first session of the Tamil Nadu Assembly in 2023 including the Governor RN Ravi’s address speech, Assembly proceedings and much more in tamil language at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.