அண்ணாமலைக்கு இசட் பிரிவு.. விஐபி பாதுகாப்புகளில் எத்தனை வகை, என்ன ஸ்பெஷல்கள் இருக்கு தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது தற்போது இசட் பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு எப்படிப்பட்டது? இந்தியாவில் மொத்தம் எத்தனை வகையான பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன? அதில் அண்ணாமலைக்கு எந்த வகையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது? என்பது பற்றிய முழு விபரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவில் ஐபிஎஸ்ஸாக இருந்த இவர் அதனை ராஜினாமா செய்தார். இதையடுத்து சிறிது காலம் ஓய்வெடுத்த அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.
தற்போது பாஜக மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதோடு மாநிலங்களின் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
இந்நிலையில் தான் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டு இசட் பிரிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு விதிப்படி பார்த்தால் அண்ணாமலையை 22 பேர் கமாண்டோக்களாக சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். அண்ணாமலையின் வீடு, தங்கும் இடம் செல்லும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் 24 மணிநேரமும் அவருக்கு கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். மிரட்டல், அச்சுறுத்தல் காரணமாக இந்த பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.

இந்தியாவில் 5 வகை பாதுகாப்பு
இந்நிலையில் தான் இந்தியாவில் தனிநபருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பிரிவுகள் குறித்து பலரும் இணையதளங்களில் தேட தொடங்கி உள்ளனர். அவர்களுக்கான முழுவிபரங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்குகிறோம். அதன் விபரம் வருமாறு: இந்தியாவில் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர், புகழ்பெற்ற நபர் அல்லது மிரட்டலுக்கு உள்ளான நபர் ஆகியோரின் பாதுகாப்புக்காக தனித்தனியே பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்புக்கு அப்பாற்பட்டு உளவுத்துறை வழங்கும் தகவல்களின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் 5 வகையான பாதுகாப்புகளை வழங்குகிறது.

X, Y, Z, Z+, SPG
தற்போதைய சூழலில் இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எக்ஸ்(X), ஒய் (Y), இசட் (Z), இசட்பிளஸ் (Z+) மற்றும் எஸ்பிஜி( SPG) என 5 வகையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒய் பிரிவில் இருந்த தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது இசட் என்ற பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

எஸ்பிஜி பாதுகாப்பு
இந்தியாவில் தனிநபருக்கு வழங்கும் மிகவும் உயர்வான மற்றும் முதல் பாதுகாப்பு பிரிவு எஸ்பிஜி (SPG) என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் உச்சபட்ச பாதுகாப்பு என்பது இதுதான். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த வகை பாதுகாப்பு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இதற்காக 1988 ல் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த எஸ்பிஜி லெவல் பாதுகாப்பு என்பது முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் யூனிட் கமாண்டராக இயக்குனர் என்ற அந்தஸ்தில் ஐபிஎஸ் ஆபிசர் இருப்பார். இதில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை என்பது பாதுகாப்பு விஷயங்களுக்காக வெளியிடுவது இல்லை.

எஸ்பிஜி பிரிவினருக்கு நவீன பயிற்சி
இருப்பினும் கூட எஸ்பிஜி வகை பாதுகாப்புக்காக மொத்தம் 4 ஆயிரம் பேர் வரை ரிசர்வ் செய்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருவார்கள். இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவு(சிஆர்பிஎப்) எல்லை பாதுகாப்பு பிரிவு (பிஎஸ்எப்), மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள். எஸ்பிஜி வீரர்கள் பெரும்பாலும் 35 வயதுக்குள் இருப்பார்கள். இவர்கள் மிகவும் துணிச்சலாகவும், மின்னல் வேகத்திலும் செயல்படுவார்கள். உலகின் அதிநவீன பயிற்சிகளை பெற்றிருப்பார்கள். அனைத்து வகையான ஆயுதங்களையம் கையாள்வதில் கில்லாடியாக இருக்கும் இவர்கள் தானியங்கி துப்பாக்கி மற்றும் க்ரோக் 17 ரக துப்பாக்கி உள்பட நவீன பிஸ்டல்களை பயன்படுத்துவார்கள். அதோடு ஆயுதங்களே இல்லாவிட்டாலும் ஒருவரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற வித்தையை கற்று கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

பிரதமருக்கு மட்டுமே..
பிரதமருக்கு மட்டும் தற்போது இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பில் உள்ளார். இதற்கு முன்பு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு சிறப்பு பாதுகாப்பு படை சட்ட திருத்தம் சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கான எஸ்பிஜி பாதுகாப்புகள் விலக்கி கொள்ளப்பட்டன.

இசட் பிளஸ் பாதுகாப்பு
எஸ்பிஜியை தொடர்ந்து இந்தியாவின் 2வது மிகவலுவான பாதுகாப்பு வளையம் என்பது இசட் பிளஸ் என்பதாகும். இதில் 55 பேர் அடங்கிய குழு பாதுகாப்பு பணியை வழங்கும். 10க்கும் அதிகமான தேசிய பாதுகாப்பு படையினர் (National Security Guard or NSG) இருப்பார்கள். இவர் தான் கருப்பு பூனை படையினர் என அழைக்கப்படுகின்றனர். இதுதவிர இந்த குழுவில் சிஆர்பிஎப், போலீஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். இவர்களும் நவீன பயிற்சிகளை பெற்றிருப்பார்கள். இந்த வகை பாதுகாப்பு தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இசட் பிரிவு பாதுகாப்பு
அதன்பிறகு 3வது வலுவான பாதுகாப்பு வளையம் என்பது இசட் பிரிவு ஆகும். இதுதான் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை பொறுத்தமட்டில் 22 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதில் 4 முதல் 5 பேர் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் போலீஸ்காரர்களாக இருப்பார்கள்.

ஒய் மற்றும் எக்ஸ் பிரிவு பாதுகாப்பு
இதையடுத்து இந்தியாவின் 4வது வலுவான பாதுகாப்பு வளையமாக ஒய் பிரிவு உள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது 11 பேரை கொண்ட குழுவாகும். ஒன்று அல்லது 2 தேசிய பாதுகாப்பு படையினர், 2 தனி பாதுகாப்பு வீரர்கள் இருப்பதோடு மற்றவர்கள் போலீஸ்காரர்களாக இருப்பார்கள். இந்தியாவில் இந்த பாதுகாப்பு பிரிவில் ஏராளமானவர்கள் உள்ளனர். எக்ஸ் பிரிவு என்பது இந்தியாவின் 5வது பாதுகாப்பு வளையமாகும். இதில் இரண்டு தனி பாதுகாப்பு அதிகாரிகள் (Personal Security Officers or PSo) 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். அதாவது மொத்தம் 6 பேர் 8 மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் பாதுகாப்பு ப பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications