பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பதவியில் இருந்து கேஆர் வெங்கடேஷ் நீக்கம்! நயினார் நாகேந்திரன் அதிரடி
சென்னை: தமிழக பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்த கே ஆர் வெங்கடேஷ் அப்பொறுப்பில் இருந்தும், பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தொழில் அதிபர்களை மிரட்டி பணம் மோசடி செய்த வழக்கில் கே ஆர் வெங்கடேஷை நேற்று போலீசார் கைது செய்திருந்த நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்து வந்தவர் கே ஆர் வெங்கடேஷ். இவருக்கு மிளகாய் பொடி வெங்கடேசன் என்ற பெயரும் உண்டு. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் மிரட்டல் மற்றும் பணமோசடி என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் கடந்த 8 ஆம் தேதி மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கே ஆர் வெங்கடேஷ் சந்தித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததோடு தமிழகம் மற்றும் ஆந்திரா போலீசாரை டேக் செய்து பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தான் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் மோசடி செய்த வழக்கில் கே ஆர் வெங்கடேஷை நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இன்று அவரை பாஜவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தமிழக பாஜக மாநில ஓபிசி அணி செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்து நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த K.R.வெங்கடேஷ், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பபட்டுள்ளது.
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications