குறைக்கப்பட்ட கல்வி நிதி.. சுமார் ரூ.2,350 கோடியை குறைத்த விஜய்.. பின்னணியில் என்ன காரணம்?
சென்னை: தமிழக பட்ஜெட்டில் கடந்த நிதியாண்டை விடவும் இம்முறை கணிசமான அளவிற்கு பள்ளி மற்றும் உயர்கல்விக்கான நொய்தி ஒதுக்கீடு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.46,767 கோடியும், உயர்கல்விக்கு ரூ.8.494 கோடியும் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிக் கல்விக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்விக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் தவெக அரசு வென்று ஆட்சியை அமைத்துள்ள நிலையில், தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை வெளியிட்டார். அதில், பள்ளிக் கல்விக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்விக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது தமிழக மக்களிடையே விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் திமுக ஆட்சியின் போது பள்ளி மற்றும் உயர் கல்விக்கு தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.
ஏனென்றால் கடந்த நிதியாண்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.46,767 கோடியும், உயர்கல்விக்கு ரூ.8.494 கோடியும் ஒதுக்கப்பட்டது. கடந்த நிதியாண்டை ஒப்பிட்டால், நடப்பாண்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.2,244 கோடியும், உயர்கல்விக்கு ரூ.101 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ரூ.2,350 கோடி வரை நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுகக் வேண்டிய பிஎம் ஸ்ரீ போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு வரவில்லை. இதில் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. அதற்கான செலவையும் தமிழக அரசே செய்ய வேண்டிய சூழல் நிலவி வருவதால், தற்போது நிதி ஒதுக்கீடு குறைந்திருப்பது விமர்சனங்களை பெற்று வருகிறது. நிதி குறைப்புக்கான காரணம் குறித்தும் எந்த விளக்கமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications
