சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலின் கனவு திட்டம்.. புதுப்பொலிவு பெறுகிறது சென்னை.. நேரடியாக களமிறங்கிய அமைச்சர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையை புதுப்பொலிவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முதல்வர் மு.கஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு

தி.மு.க ஆட்சி காலத்தில்தான் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் அதிக பாலங்கள் கட்டப்பட்டன என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்டாலின் முன்பு சென்னை மேயராக இருந்தபோது கூவத்தை தூய்மைப்படுத்துவது தொடர்பாக வெளிநாடுகளுக்கும் சென்று ஆலோசனை நடத்தி வந்தார்.

சிங்கார சென்னை 2.0

சிங்கார சென்னை 2.0

தற்போது திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார். சென்னையை உலகத் தர நகரமாக மாற்றுவதற்காக சென்னையில் எங்கும் குப்பைகள் இல்லாதவாறு தூய்மைப்படுததும் பணியை முதல் வேலையாக சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரை உலக புகழ்பெற்றதாகும்.

விறுவிறு பணிகள்

விறுவிறு பணிகள்

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன. இதுதவிர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளும் தூய்மைப்படுத்தப்பட உள்ளன. சென்னை நீர்வழித் தடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு 'டிரோன்' மூலம் சோதனை முறையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம்

சென்னையில் உள்ள பூங்காக்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி மட்டுமில்லாது பல்வேறு துறை அமைச்சர்களும் சென்னையில் அடிக்கடி ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் வளர்ச்சி திட்டம் மேற்கொள்வது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

டெண்டர் முறைகேடு

டெண்டர் முறைகேடு

இந்த கூட்டம் முடிந்த பின்பு நிருபர்களிடம் பேசிய கே.என்.நேரு கடந்த ஆட்சியில் துறை வாரியாக நடைபெற்ற தவறுகள் மற்றும் டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது. மேலும் துறைவாரியாக புகார்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
சென்னையில் மழைநீர் தேங்காத அளவிற்கு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்களில் தண்ணீரை சுத்தப்படுத்தி மழைநீரை சேமிப்பதற்க்கான பனிகள் நடைபெற்று வருகிறது.

முதல்வர் அறிவிப்பார்

முதல்வர் அறிவிப்பார்

மேலும் சென்னையில் 330 கழிவுநீர் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அதனை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் சென்னையில் பல்வேறு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் நேங்காத அளவிற்கு பணிகள் முழுவிச்சில் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். நகராட்சி தேர்தலை பொறுத்தவரை மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு பின்பு தேர்தல் தேதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் அமைச்சர் கே.என் நேரு கூறினார்.

English summary
Tamil Nadu Chief Minister M. Kastalin has decided to come up with various projects to modernize Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X